கண்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

477

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்டியில் பெருமளவு பிக்குமாரும், மக்களும் ஒன்று கூடியமையினால் அசாதாரண சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டயர்களை எரித்து பொது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், கடையடைப்பு போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கலவரம் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கவச வாகனங்களும் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE