2 மணிநேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மெட்டா நிறுவனத்தின் CEO மார்க்

116

 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேற்று முடங்கியதனால் கோடிக்கணக்கில் பணத்தை மார்க் ஜூக்கர்பர்க் இழந்துள்ளார்.

உலகளவில் முடங்கிய சமூக ஊடகங்கள்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு நேற்று முடங்கியது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றிபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியதனால் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

பின் தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர் பெர்க் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த மார்க்
அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர் பெர்க் $3 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE