இலங்கை மனித உரிமைகள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து தெரிவிக்காத போதிலும், பல நாடுகளுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
31வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன்போது உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ரட் அல் ஹூசைன் இலங்கைக்கு எதிரான எந்தவித கருத்தினையும் தெரிவித்திருக்கவில்லை.
இது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விரிவான விளக்கத்தை பிரான்ஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் ச.வி.கிருபாகரனும், பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
லங்காசிறி எவ்.எம் அரசியல்களம் வட்டமேசையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிபலிக்கின்ற கருத்துக்கள் எப்படியிருக்கின்றன. இதன் எதிர்காலங்கள் என்ன? இலங்கை அரசியலின் போக்கு நிலை எவ்வாறு உள்ளன போன்ற பல விடயங்களை தெளிவுபடுத்தினர்.