2009ல் என்னை கடத்திச் சென்றது காவல்துறை. தலைகீழாக தொங்கவிட்டு அடித்தனர். என் விதைப்பைகளை கம்பால் அடித்தனர்.

320

 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் அம்பலமாகியுள்ளது.

 

தமிழர் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தப்படுவதாக அந்த வீடியோவில் சாட்சியம் அளித்துள்ளனர் தமிழர்கள்.
இலங்கையில் நடந்த இறுதி போரில் தமிழ் இனத்தை குறிவைத்து அழித்தொழித்த அப்போதைய அதிபர் ராஜபக்சே பதவி பறிபோய், சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமைந்தபோது, தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அது வெறும் கானல் நீர் என்பது போகப்போக தெரிந்துகொண்டுள்ளது.

இலங்கையில் புதிய அரசு அமைந்துவிட்டதால், இனி தமிழர்கள் வாழ்க்கை உச்சத்துக்கு போய்விடும் என்று நினைக்காவிட்டாலும், அச்சமின்றியாவது வாழ்வார்கள் என்று நினைத்த மனித நேய தமிழர்கள் மனதுக்கு அமைதி கிடைக்கவில்லை என்பது ஐடிஜேபி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் அம்பலப்பட்டுபோய் நிற்கிறது.

download

இதில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பெயர் தெரிவிக்கவிரும்பாத இரு தமிழ் இளைஞர்கள் தங்கள் குமுறலை கூறியுள்ளனர்.

சாட்சியம் 1: நான் வட இலங்கையை சேர்ந்த 20 வயது இளைஞன். 2009ல் என்னை கடத்திச் சென்றது காவல்துறை. தலைகீழாக தொங்கவிட்டு அடித்தனர். என் விதைப்பைகளை கம்பால் அடித்தனர். இந்த ஆண்டு முல்லிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சென்று, உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினேன். அப்போது அந்த நிகழ்ச்சியை, ராணுவத்தினர் போட்டோ எடுத்தனர். சில நாட்களிலேயே போட்டோவை வைத்து தேடி பிடித்து எனது கிராமத்திற்கு வந்தனர். கையெழுத்து போட வருமாறு என்னை அழைத்துச் சென்றனர். நான் சென்றேன். அப்போது, வேனில் வந்த சிலர், கை, கால், கண்களை கட்டிவிட்டு, ஒரு இடத்தில் போட்டு அடைத்தனர்.

பெட்ரோல் ஊற்றிய பொலீத்தீன் பையால் என் முகத்தில் போட்டுவிட்டு, மின்சார வயரை வைத்து அடித்தனர். ஆண் விதையை பிடித்து அழுத்தி துடிக்க துடிக்க கொடுமை செய்தனர். விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் நிறுவ முயற்சி செய்கிறேன் என்று என்மீது குற்றம்சாட்டப்பட்டது.

சாட்சியம் 2: ஒரு வெள்ளை வான் எனது ஊரில் வழிமறித்தது. கடத்திச் சென்று, இருட்டு அறை ஒன்றில் அடைத்து வைத்தனர். அங்கு, நிர்வாணமாக படுக்க வைத்து, சிங்கள ராணுவத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆணுறுப்பை எனது வாயில் நுழைத்தனர். நான் மறுத்தேன். அப்போது என்னை அடித்து துன்புறுத்தினர். இதன்பிறகு, வலுக்கட்டாயமாக பின்புறத்தில் உறவு வைத்தனர்.

புலிகள் இயக்கத்தை கட்டி எழுப்ப யாரும் முயற்சி செய்துவிடக்கூடாது என்பதற்காக இதுபோல மோசமான விசாரணைகளை சிங்கள ராணுவம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் சிறிசேனா போன்றோர் இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்துவிட்டதாக கூறிவருகின்றனர்.

90,072 t

SHARE