2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் 

936

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம்  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில்  இன்று சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலரும் இன்று குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின்  தலைமையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது.

செங்கோல் கொண்டுவருவதற்கு முன்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் வருகை தந்ததுடன், ஆளும் கட்சியின் பலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வருகை தந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  செங்கோல் கொண்டு வந்ததன் பின்னரே வருகை தந்தார். இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கையில் கட்டுடன்   சபைக்குள் வந்திருந்தார். சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் தொண்டமன் எம்.பியும்  அவருடைய ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும்  நீண்ட நேரமாக அளவளாவிக்கொண்டிருந்தனர்.

தொண்டமான் எம்.பி யின்  இடது கையில் கறுப்புத் பெண்டேச் கட்டியிருந்ததை அவதானித்த பல எம்.பிக்களும் அவரிடம்  குசலம்  விசாரித்தனர். எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷவும்  கையை காண்பித்து தொண்டமானிடம் ஏதோ வினாவினார்.

புன்னகையுடன் நிதி அமைச்சர் 

இந்நிலையில் மக்களை வலுவூட்டல், ஏழைகளை பாதுகாத்தல் என்ற  தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான  வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக  நிதியமைச்சர் மங்கள சமரவீர சபைக்குள் பிரவேசித்த போது சபையிலிருந்து ஆளும் கட்சியினர்  மேசைகளில் கைகளால் தட்டி வரவேற்றனர். தன்னுடைய ஆசனத்திற்கு வந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தன்னுடைய கையிலிருந்த கறுப்பு நிறத்திலான பையை தூக்கி காண்பித்துகொண்டு சிரித்துகொண்டே ஆசனத்தில் அமர்ந்தார். இதன் பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  பலரும் தாமதித்தே  சபைக்குள் வந்தமர்ந்தனர்.

 சந்திரிக்காவும் – வெளிநாட்டு தூதுவர்களும்

இன்றைய வரவு செலவு திட்ட அமர்வுகளுக்கு தூதுவர்கள்,  உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், இலங்கை முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் எள பலர் வருகைதந்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தார். இதன் பின்னர் நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையினை ஆரம்பித்தார்.

இதன்போது கடந்த கால ஆட்சியின் மோசடிக்கார வேலைத்திட்டங்கள், மற்றும் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டம்  என்பன குறித்த தனது விமர்சனக் கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

தனியார் துறைக்கான இடம் 

அதேபோல் தனியார் துறை சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அதிகமான இடங்களில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து பேசிய நிதி அமைச்சர், மஹிந்த ராஜபக் ஷ எப்போதும் இராணுவத்தை காட்டியே ஆட்சி நடத்துகின்றார், இராணுவம் இல்லையென்றால் இவர்களின் அரசியல் இல்லாமல் போய்விடும். அவ்வாறு இராணுவம் பற்றி பேசும் இவர்கள் இராணுவத்தின் நலன்களுக்காக எந்தவொரு கொடுப்பனவுகளையும், சலுகைகளையும் செய்யவில்லை என கூறினார். இந்தக் கருத்துக்களை அவர் முன்வைக்கும் போது எதிரணியில் மஹிந்த தரப்பில் இருந்த அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

நாய்களுக்கும் பாதுகாப்பு 

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திகளுக்கு, மக்களுக்கு மட்டும் அல்லாது நாய்களுக்கும் நிவாரணங்களை வழங்குகின்றோம். இந்த யோசனையை கேட்டதும் நிமல் சிறிபாலடி சில்வாவின் மனைவி அதிகமாக சந்தோஷப்படுவார் எனக் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தின் போது  புதுமணத் தம்பதிகள்  தங்களுடைய கனவை நனவாக்கிக் கொள்வதற்காக  குறைந்த வட்டி வீதத்தில் கடன் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவித்தார். இதன்போதும்  ஒன்றிணைந்த எதிரணியின்  உறுப்பினர்கள் சிலர் கேலியாக விமர்சித்ததை அடுத்து மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் பெயரை குறிப்பிட்டு அவ்வாறான நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டவாறு சிரித்தார்.

அந்த 24 போரையும் அணிப்புவீர்களா 

மேலும் சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு யோசனை ஒன்றும் அவரால் முன்வைக்கப்பட்டது. அதாவது போதைப்பொருள் பாவனையில் கைதாகிய நபர்கள் விடுபடும் போது அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக வெளியேறுகின்றனர். ஆகவே அவ்வாறு கைதான நபர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களை அமைத்து அவர்களுக்கு நன்னடத்தை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த சிலர் ” அந்த 24 பேரையும் அனுப்புவீர்களா? ” என கேள்வு எழுப்பினர். இதற்கு  பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர,  அவ்வாறு இருப்பார்களானால்  அவர்களையும் அனுப்புவோம் என்றார்.

பலர் வெளியேறினர்

வரவு-செலவுத்திட்ட யோசனையை பிற்பகல் 2 .10 மணிக்கு வாசிப்பதற்கு ஆரம்பித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய உரையை மாலை 4.20க்கு நிறைவுக்கு நிறைவு செய்தார். அவரது உரை ஆரம்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சியின் அனைவரும் மேசைகளை தட்டி அவரது முன்மொழிவுகளை ஆதரித்தனர். எனினும் சற்று நேரம் கடக்கையில் ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் ஒருவர் இருவராக வெளியேறி பாதி ஆசனங்கள் காலியானது. அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடை நடுவே வெளியேறினர். வரவு செலவு திட்ட உரையினை எதிர்க்கட்சி தலைவரும் முழுமையாக சபையில் இருந்து கேட்கவில்லை. அவரும் வெளியேறியிருந்தார்.

வரவு செலவு திட்ட உரை நிறைவடைந்த பின்னர் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர்களுக்கான உணவறையில் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த- பிரதமர் ரணில், நிதி அமைச்சர் – தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிரதமர் ரணில் -மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கூடி பேசிக்கொண்டனர்.

ஒரே பார்வையில் 2019 ற்கான வரவு செலவு
04.19 வரவு – செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
04.13 மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம்.
04.12 கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக ஒருநாள் சேவைக்கட்டணம் 5,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை. சாதாரண சேவைக் கட்டணம் 3,000 ரூபாவாகும்
04.10 கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு. இலங்கையில் கசினோ விடுதிகளுக்கான நுழைவுக்கட்டணம் 50 டொலர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 100 டொலர்களாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
04.08 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருப்பட்டி, கள்ளு  உற்பத்தியை அதிகரிப்பதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04.05 சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு
04.00 யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு
03.55 250 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
03.51 புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை
03.50 வடக்கில்  10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு
03.49 வணக்கஸ்த்தலங்களில் சூரியசக்தித் திட்டத்தை நிறுவ நடவடிக்கை.  இதற்காக ஒவ்வொரு வணக்கஸ்த்தலங்களுக்கும் 300,000 ரூபா வழங்கப்படும்
03.48 இந்த வருடத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 15,000 செங்கல் மற்றும் மோட்டார் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஏற்கனவே 4,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,500 மில்லியன் ரூபா  வழங்கப்படும்.
03.46 இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்
03.45 பிளாஸ்ரிக், பொலித்தீன்  உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.
03.44 முப்படைத் தளபதிகளின் கொடுப்பனவை  5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், அவர்களது வீட்டுத்திட்டக் கொடுப்பனவை 30 வீதத்தால் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கடற்படை மற்றும் விமானப்படை சீருடைக் கொடுப்பனவை 200 ரூபாவாவிலிருந்து 600 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03.43 சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.
03.42 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.
03.41 அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு
03.40 ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு
03.39 அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03.38 நகர்ப்புற ஈரநிலத் திட்டத்துக்காக பராமரிப்புக்காக 10,900 நிதி ஒதுக்கீடு
03.37 அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு
03.37 போகம்பர சிறைச்சாலை  பொது இடமாக மாற்றப்படுமென்பதுடன், இதன் அபிவிருத்தித் திட்டங்களுக்காக  750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03.36 ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
03.35 நாடு முழுவதும் குடிநீர் திட்டங்களுக்கு 45,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
03.34 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
03.33 ஆசியாவின் நவீன நகரமாக கொழும்பு நகரம் மாற்றமடைவதுடன், இதன் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்காக 8,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். அத்துடன்,  சுகித புரவெர திட்டத்திற்கு 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
03.33 கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03.32 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை
03.31 யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கண்கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
03.30 கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.
03.29 2019 ஆம் ஆண்டில் 7 முக்கிய திட்டங்களில் கால்வாய் மற்றும் தலைமைத் திட்டங்களை நிறைவு செய்ய ரூ .2,410 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெதுரு ஓயா திட்டம், மெனிக் கங்கை நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மொறானா திட்டம் ஆகியவை உள்ளிட்டவைகளுக்காக 21,000 குடும்பங்களை நேரடியாக விவசாயம் மேற்கொள்வதில் பயனளிக்கும்.
03.29 அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.
03.28 தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை
03.27 கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்
03.26 தெரிவுசெய்யப்பட்ட இராணுவ முகாம்களில் உள்ளவர்களுக்கு  NVQ தொழிற்பயிற்சி தரச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
03.25 சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு
03.24 விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
03.23 தமிழ் மொழியல் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ரூ. 400 மில்லியன் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு வழங்கப்படும்
03.22 3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர  முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ்  1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .
03.21 பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03.20 கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு
03.19 ஆய்வு கூடம் மற்றும் வாசிகசாலை என்பவற்றை விரிவாக்க நடவடிக்கை. இதற்கு 32 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு. பாடசாலை விடுமுறை நாட்களில் ஆசியரியர்களுக்கு பயிற்சி நடத்தப்படும். அதற்க 100 மில்லியன் ஒதுக்கீடு
03.18 ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை
03.17 நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய கட்டாயம் வேண்டும்.
03.16 இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு
03.15 கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03.14 தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
03.13 ஐந்து அறைகளைக் கொண்ட ஹோட்டல்களை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து பதிவு செய்ய நடவடிக்கை. அதற்கான பதிவு நடவடிக்கைகள் இலகு படுத்தப்படும்
03.12 தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்
03.11 அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03.10 வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்துவதற்கான வளங்களை அதிகரிக்க நடவடிக்கை
03.09 தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில்
SHARE