2019 ஆம் ஆண்­டு கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்­கான விண்­ணப்ப காலம் நீடிப்பு

232

2019 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு பாட­சாலை மட்­டத்­திலும் தனிப்­பட்ட ரீதி­யிலும் விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால எல்லை இம்­மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு விண்­ணப்­பிக்க விரும்பும் அரச சேவை­யி­லுள்ள அலு­வ­லர்கள் தற்­போ­துள்ள முறை­மைக்­க­மை­வாக தமது விண்­ணப்ப படி­வத்­தினை கிராம அலு­வ­லர்­களால்  உறு­திப்­படுத்த இய­லாத சந்­தர்ப்­பத்தில் உரிய நிறு­வனத் தலைவர் மூல­மாக சமர்­ப்பிக்­கப்­படும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.

விண்­ணப்­பங்கள்  தொடர்­பான மேலதி தக­வல்­களை 011-2784208, 011-2784537, 011-3188350 மற்றும் 011-3188350 என்ற பாட­சாலை பரீட்­சை­கள் ஒழுங்­க­மைப்பு பெறு­பேற்­றுக்­கிளை இலக்­கங்­க­ளுக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் பெற்றுக் கொள்­ளலாம்.  அல்­லது 1911 என்ற அவசர தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE