2020 ஆம் ஆண்டளவில் இலங்கை அமெரிக்காவின் காலணித்துவ நாடாக மாற்றம் பெறலாம்

1078

அனைத்துலக நாடுகளினதும் பிரச்சினைகளில் ஒன்றுதான் அமெரிக்க நாட்டின் தலையீடாகும். முழு அரபு இராச்சியத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய இலக்காகும். அதனொரு கட்டமாகவே அமெரிக்காவின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைகிறது எனலாம். தற்போது அதனது தேவை கருதி பிரச்சினையை இலங்கை பக்கம் திருப்பிவிட்டுள்ளது. அது எவ்வாறெனில் 10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையை தனது காலணித்துவ நாடாக மாற்றியமைப்பதற்கான திட்டமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை மன்னராட்சிக்கும அதனைத்தொடர்ந்து அந்நியராட்சிக்கு உட்பட்ட நாடா கவே காணப்பட்டது. 1505 – 1658 ஆம் ஆண்டுவரை போர்த்துக்கேயரும், 1958 – 1796 வரை ஒல்லாந்தரும், 1796 – 1948 வரை ஆங்கிலேயரும் இலங்கையை ஆட்சி செய்துவந்தனர்.

போர்த்துக்கேயரும் ஒல்லாந் தரும் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களைக் கைப்பற்றி னார்களே தவிர அவர்களினால் கண்டி இராச்சியத்தை கைப்பற்றமுடியவில்லை. அத்துடன் இவர்கள் சட்டம், சமயம் ஆகிய துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் அர சியலில் பாரிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. ஆங்கிலேயர் கரையோரங்களை கைப்பற்றியது மாத்திரமின்றி கண்டி இராச்சியத்தினையும் கைப்பற்றி, பொருளாதார ரீதியிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அதுவே இன்று அத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்திக்கு காரணமாகும். அரசியலில் பிரித்தானியா மாதிரியான பாராளுமன்ற ஆட்சி முறை மையையும், பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறையில் ஏற்று மதி இறக்குமதி கொண்ட பொருளாதாரத்தையும் உருவாக்கினர்.

இவர்களால் ஏற்படுத்தப்பட்ட இம்மாற்றங்களே இன்றைய இலங்கையின் நிலைக்குக் காரண மாக உள்ளது. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி இலங்கை அரசி யல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு பிரித்தானியா இலங்கையின் பெரும்பாலான கரையோரங்களைக் கைப்பற்றினாலும் 1798 ஆம் ஆண்டிலேயே இலங்கையின் கரையோரப்பிரதேசங்கள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

1798 – 1802 ஆம் ஆண்டுவரை இலங்கையில் நடைபெற்ற ஆட்சி இரட்டையாட்சியாகும். அதாவது வரி, வர்த்தகம் போன்ற விடயங்களுக்கு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனிகள், பாதுகாப்பு சிவில் போன்ற விடயங்களுக்கு பிரித்தானிய அரசையும் இணைத்து கொண்டுசெய்த ஆட்சிதான் இரட்டை ஆட்சியாகும். 1892 இல் கைச்சாத்திடப்பட்ட எமினியஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடாக மாறியது.

இந்த முறைமையினை மாற்றி அமெரிக்கா தனது காலணித்துவத்துக்குக்கீழ் உட்பட்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் அனைத்து நிர்வாக விடயங்களும் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அவருக்கு ஆலோசனை கூற ஒரு சபை உருவாக்கப்பட்டது. அதில் இராணுவத்தளபதி, குடியேற்ற நாட்டு காரிய தரிசி, பிரதம நீதியரசர்கள் போன்றோர் இடம்பெற்றனர்.

1803 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தினை கைப்பற்றும் நோக்கில் ;பிரித்தானிய படையெடுப்பொன்று மேற்கொண்டபோது, கண்டியர்களின் கொரில்லாத்தாக்குதல், மலேரியா நோய், காட்டுநோய் போன்றவற்றின் காரண மாகவும் சீரற்ற காலநிலை காரணமா கவும் போராட்டம் தோல்வியடைந்தது. பிரித்தானியர் கண்டி இராச்சியத்தினைக் கைப்பற்ற முனைந்தபொழுது கண்டி பிரதானிகளின் சில நிபந்தனைகளுக்கு உடன்பட்டிருந்தது. கண்டி இராச்சியம் தனியாக ஆளப்படும். பௌத்த மதம் அரச ஆதரவோடு தொடர்ந்தும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்கப்படும். அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க அரசு இலங்கையரசுடனான இரகசிய பேச்சுக்களை அரச இராஜதந்திரிகளுடன் பேசிவருகிறது.

ஏற்கனவே அமெரிக்க அரசு இலங்கையில் அமைந்துள்ள திருகோண மலை, கொழும்புத் துறைமுகங்களை, கடற்கரையோரங்களை தன்னகத்தே கொண்டுவர முயற்சித்துவருகிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா,சீனா போன்ற நாடுகள் விளங்குகின்றன. பலமுறை அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இரக சிய பேச்சுக்களை நடத்தியபோதிலும் அவைசாத்தியமற்றுப்போயின. ஆனால் தற்பொழுது மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் ஆசியப்பிராந்தியத்தில் தனக்கான ஒரு தளம் இல்லாமல் போகும் என்கின்ற காரணத்தினால் தனது போர் வியூகங்களை சரியாக செய்யமுடியாமையினாலும் அமெரிக்க அரசு இலங்கையரசிற்கு பல நிபந்தனைகளைக் கொடுத்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை யரசை ஆரம்பகட்டத்தில் நெருக்கிய அமெரிக்கா தற்பொழுது அதனை தளர்த்திவிட்டுள்ளது.

காரணம் அமெரிக்கா எவற்றை யெல்லாம் கேட்கிறதோ அவற்றையெல்லாம் தருவதற்கு இலங்கையரசு தயாராக இருக்கிறோம் என வாக்குறுதியளித்தமையினாலேயே. இன்று இலங்கையரசு போர்க்குற்றம் தொடர்பில் துணிவான அறிக்கைகளை தெளிவாக வெளியிட்டிருக்கின்றது. போர்க்குற்ற விசாரணைகளை மும்முரமாக நின்று செயற்படுத்தியது அமெரிக்காதான். ஆனால் தற்பொழுது ஓரமாக ஓதுங்கியுள்ளது. அரசியல் இலாபத்திற்காக எமது தாய்நாட்டை அந்நியர்களின் காலணித்துவத்திற்கு உட்படுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்துவிடும் பட்சத்தில் ஒரு சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கும் நிலைமை ஏற்படும். இதேபோன்றே அக்காலகட்டத்தில் பிரித்தானியர்களும் செய்தார்கள். கண்டி இராச்சியம் தொடர்பாக 1818ஆம் ஆண்டில் கண்டியில் ஓர் கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை வெள்ளைக்கிளர்ச்சி என்பர். பிரித்தானிய இராணுவத்தினரால் கொடூரமான முறை யில் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் 1827இல் இலங்கையின் நிர்வாகத்தை சீர்படுத்துவதற்காக எதிர்காலத்தில் கண்டிக்கலவரம் போன்ற பெரியதொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும் முழு இலங்கையையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்காகவும் பெருந்தோட்டத்துறையை தனியா ருக்கு தருவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கூறப்பட்ட கொள்கைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதாக கோல்புறூக் ,கெமரூன் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அக்குழுவினர் இலங்கையில் சில காலம் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து குறிப்பாக கமரூன் சட்டம், நீதி தொடர்பாகவும் கோல்புறூக் அரசியல் தொடர்பாகவும் ஆராய்ந்து அதனடிப்படையில் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினர்.

இதுவே 1833 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதுவே 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்,கமரூன் சீர்திருத்தம் என அழைக்கப்பட்டது. கோல்புறூக் ஆணைக்குழுவின் நிபந்தனைகள்:
1. இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதற்கு தேவையான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமான சந்தைச் சூழலை ஏற்படுத்தல்.
2. குடியேற்ற நாட்டாட்சி நிர்வாக அதிகாரிகள் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடைசெய்தல்.
3. இலங்கை நிர்வாகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல்.
4. மலைநாட்டில் நிலவிய தனியான நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவருதல்.
5. இலங்கையின் நிர்வாகத்தை 05 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் அரசஅதிபர்களுக்கு கீழ் கொண்டுவருதல்.
6. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுதேசிய உயர் வர்த்தக உறுப்பினரும் நிர்வாகத்தில் பங்கேற்கும் முகமாக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்;கொள்ளுதல்;.
7. தேசாதிபதிய சட்ட நிர்வாக இணைத்து ஆட்சிபுரியும் ஒருவராக மாற்றல்.

முக்கிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் காலணித்துவ நாடாக இலங்கை மாற்றமடையும் போது ஒரு சுதந்திரமான நீதித்துறையிலான உயர் நீதிமன்ற நீதிபதியொருவரை அமெரிக்க அரசினால் நியமிக்கப்படுவார் அதன்படி,

உயர் நீதிமன்ற தலைமையின் கீழ் ஒரு ஐக்கிய நீதிமன்றினை உருவாக்கல், மாவட்ட நீதிமன்றங்களை உருவாக்கல், சுதேசி அவர்களுக்கும் தனியாக இயங்கிவரும் நீதிமன்றங்களை உரிய நடவடிக்கை எடுத்தல், இலங்கையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தல்.

1833-1910ஆண்டுவரை சுமார் 77 ஆண்டுகள் வாழும் கோல்புறூக் அரசியலில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இங்கு உருவாக்கப்பட்ட சட்டமன்றம் எதிர்காலத்தில் பாராளுமன்றம் உருவாக வழியமைத்துக்கொடுத்தது, இதன் காரண மாக பிரதிநிதித்துவ முறைமை அறிமுக மானது, தேசாதிபதியிடம் செறிந்து காணப்பட்ட அதிகாரங்கள் சட்ட நிர்பண சபையிடமும் சட்ட நிரவாக சபையிடமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆங்கிலக்கல்வி அறிமுகமானது. ஆங்கிலம் கற்ற உயர் மத்தியினர் எழுச்சிபெறச்செய்தனர்.

வலுவேறா கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அரசியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, பொருளாதார விடயத்தில் தனியொரு பங்கேற்பான வாய்ப்பு இடம்பெற்றது. இதனால் இந்திய பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுசெய்தனர்.

இதன் காரணமாகவே இலங்கையில் ஆங்கிலம் பேசுவோரின் தொகை அதிகரிக்கத்தொடங்கியது. கலாசாரம் மாற்றம் பெறத் தொடங்கியது. இந்த யாப்பு திருத்தம் தொடர்பில் ஏற்பட்ட குiறா படுகளை பாரக்கின்றபொழுது,

1. பொருளாதார முறைமையின் காரண மாக கரையோர விவசாய முறைமை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
2.ஆங்கிலக்கல்வியின் பரவல் இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்தை சீர்குழைப்பதாக அமைந்தது. இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் பல குறைபாடுகளைக் கொண்டதாக காணப்பட்டது.

இவ்வரசியல் சீர்திருத்தம் இலங்கைக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 77 ஆண்டு காலமாக இந்த கோல்புறூக் அரசியல் இருந்துவந்தது. தற்பொழுதும் பல அரசியல் வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் மாற்றம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்துப்பார்க்கின்றபொழுது, மாட்டுக்கு மணிகட்டப் போவது யார்? அது அமெரிக்காவாகத்தான் இருக்கும். அக்காலம்தொட்டு இன்று வரைக்கும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இருந்தவண்ணமே உள்ளன. இவை படிப்படியாக தோற்றம் பெற்று ஆசியப்பிராந்தியத்தில் தனக்கு ஒரு பிரச்சினை வருகின்ற பொழுது அதனை மாத்திரம் கரிசணை கொண்ட இலங்கை அரசின் மீது அமெரிக்கா பல நெருக்கடிகளை கொடுக்கிறது.

 

எந்தவொரு நாட்டிற்கும் நாம் அடிபணியப்போவதில்லை என சவால் விட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்வாறே நடந்து கொள்வாராக இருந்தால் அமெரிக்க காலணித்துவம் உருவாவதை தடுத்து நிறுத்தமுடியும் இல்லையெனில் இலங்கை தேசம் ஒரு சோசலிசத்தை நோக்கிச்செல்லும் அதேவேளை தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் எவ்வாறு தொழில் செய்து வாழ்கிறார்களோ அவ்வாறான நிலைமையே ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

SHARE