2023 இல் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்

248
ஜோதிட சாஸ்திரப்படி, தனுசு ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மிநாராயண யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த யோகம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான பலனை ஏற்படுத்தி வாழ்வில் மகத்தான வெற்றியைப் பெற உதவும். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் புத்தாண்டில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
சிம்மம் : ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுமட்டுமின்றி, பொருளாதார பலனும் இருப்பதாக தெரிகிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் சூழ்நிலை உருவாகும். திருமண வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மேலும் பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும்.
தனுசு :  ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் அதில் லக்கினாதிபதி யோகம் உருவாகிறது. ஏனெனில் புதன் ஏற்கனவே இங்கு அமர்ந்து உள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றியின் கட்டம் தொடங்கும். இதுமட்டுமின்றி இந்த காலகட்டத்தில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது.
வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இந்த பயணங்கள் அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும். பொருளாதார ஆதாயம் கைகூடும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
கன்னி : சுக்கிரனின் பெயர்ச்சியால் லக்னாதிபதி யோகம் அமைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். இந்த நேரம் பண வரவின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானது.
தொழில், வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான பலன்கள் உண்டாகும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. பிற முதலீடுகளையும் தற்போது மேற்கொள்ளலாம்.
இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். – Oosai
SHARE