2023 -ம் ஆண்டில் உலகையே வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள்: என்னென்னெ தெரியுமா?

203

 

2023 -ம் ஆண்டில் அனைத்து துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான 5 AI தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு (AI)
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.

முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார்.

5 AI தொழில்நுட்பங்கள்.
GPT-4
ChatGPT மொழி மாதிரியான GPT-3.5 மாடலுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப வெளியீடுகளின் ஒன்று GPT-4 ஆகும். மனித அளவிலான செயல்திறனை GPT-4 செய்ததாக OpenAI கூறியுள்ளது.மேலும், இதனை நாம் சந்தா மூலமாக மட்டுமே இயக்க முடியும்.

Bard AI
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு கூகுள் நிறுவனம் கொண்டு வந்தது தான் Bard AI. இது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், Gemini என்ற மொழி மாதிரியை இணைத்தது. அதாவது, சக்திவாய்ந்ததாக கூறப்படும் Gemini மூலம், Bard AI அப்கிரேட் ஆகியுள்ளது என்று கூறலாம்.

DALL-E 3
OpenAI, பிரபலமான டெக்ஸ்ட்-டு-இமேஜ் உருவாக்கும் DALL-E மென்பொருளை மேம்படுத்த முடிவு செய்தது. தற்போது, DALL-E ஆனது ChatGPT உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Bing Chat
மைக்ரோசாப்ட், சொந்தமாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை வைத்து அறிமுகப்படுத்தியது தான் Bing Chat. அதாவது, AI தொழில்நுட்பத்தை Bing Browser -ல் ஒருங்கிணைத்து புதிய கருவியாக Bing Chat கொண்டு வரப்பட்டது.

எலான் மஸ்க் உருவாக்கிய xAI என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தான் Grok எனப்படும் சாட்பாட் ஆகும். இது கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையுடனும் பதிலளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE