பிரபாகரன் இல்லை என்று நினைத்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழரசுக்கட்சியும் கூறிக்கொள்ளும் விடயங்கள் மக்கள் மனதில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளன.

714

 

உலகத்தின் ஒவ்வொரு வரலாற்றையும் மாற்றியமைத்த பெருமைமிக்க துடிப்புள்ள இளைஞ்ஞர்களே வணக்கம்.
ஒரு வரலாற்றுப்பாதையில் எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது இப்பொழுதும் தொடர்கின்றது. எமது இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய சிந்தனையாளரகளே அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது பதிலுக்கு எல்லாவற்றையும் விமர்சிக்கும் பண்பே அவர்களிடம் இருக்கும். எமதருமை இளைஞர்களே எதையும் மாற்றும் சக்தியுள்ளவர்கள் இளஞ்ஞர்களே.
உங்களால்தான் ஒருவரலாற்றையே அமைக்கமுடியும் ஒவ்வொருயுகத்திலும் வரலாற்றை மாற்றியவர்கள் எல்லோரும் இளஞ்ஞர்களாகவே இருந்தனர். எமது தேசியத்தலைவர் பிரபாகரன் கூட ஒரு இளஞ்ஞன் ஆகவே வரலாற்றை மாற்றப்புறப்பட்டார். தமிழனை நாய் என பார்த்த சிங்களவன் புலி என பயப்படவைத்தார். எனவே வரலாற்றுச் சக்கரம் வேகமாக சுழல்கின்றது ஒரு தலைமுறையை விட்டு அடுத்த தலைமுறைக்கு இன்று போராட்டம் கைமாறுகிறது. எமதருமை தமிழ் இளஞ்ஞர்களே நீங்கள் கற்பனையைவிட்டு முதலில் உண்மை என்ன என்பதை உணர்ந்து வெளியே வரவேண்டும். முதலில் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது? தலைவர் பிரபாகரனின் நிலைமை என்ன என்று தேடுவதை முதலில் நிறுத்தி.
புலி என்ற மாயையில் இருந்து வெளியே வாருங்கள். சில நேரங்களில் எல்லாமே எமக்கு எதிராக நடக்கிறது இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் உண்மை அதுதான் என்றால் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முள்ளிவாய்காலில் என்ன நடந்தது என்பது தமிழரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் நடந்துவிட்டது. அடுத்த கணமே. ஒரு கற்பனையில் இப்படி நடந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் சாதிக்கமுடியாத கையாலாகதவர்களிற்கு ஏற்படுகின்றது.
அந்தக்கற்பனைக்கதைகள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. கற்பனைக்கதைகளின் அடிப்படையில் வருவார், வருவார் என்ற நம்பிக்கையினை மக்களின்மனதினில் இன்று ஆழமாக பதியத்தொடங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளிற்கு முன்பு ஒரு கவிஞரால் எழுதப்பட்ட ஒரு கற்பனைக்கதையான மகாபாரதக்கதையும். உண்மைக்கு புறம்பாக திரிபுபடுத்தி எழுதப்பட்ட இராமாயணக்கதையும் இன்றும் உண்மையென்றே எல்லோரும் நம்புமளவிற்கு. தலைவர் விடயத்திலும் தமிழினம் மாபெரும் தோல்வியடைந்துவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அரசிற்கெதிராக தமிழர் போராடினார்களே அந்த அரசிற்கு நடந்தது என்ன நடந்துகொண்டிருப்பது என்ன என்ற உண்மை தெரிய தமிழரோ இன்னும் புலி என்ற மாயையில்இருந்து விடுபடவில்லை. புலிகள் வருவார்கள் மூன்றே நாளில் தமிழீழத்தை மீட்டெடுப்பர் என்ற மூன்றுநாள் கனவில் அளவிற்குமிஞ்சிய கற்பனையில் வாழ்கிறார்கள்.
அமெரிக்காவான அமெரிக்காவே ஈராக்கையோ ஆப்கானிஸ்தானையோ மூன்றுநாளிற் பிடிக்க முடியாததை புலிகள் செய்வார்கள் என்றால் அமெரிக்காவைவிடவா பலமாக உள்ளனர்? உண்மையில் மகி;ந்தராயபக்ஸவிற்கோ அல்லது கோத்தபாயராயபக்சவிற்கோ அல்லது சரத்பொன்சேகாவிற்கோ இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்று தெரியாது என்று யாராவது சொல்லமுடியுமா?

உண்மையிலேயே தலைவர் சாகவில்லையென்றால் எதற்காக ஒரு அரசிற்கெதிராக போராடிய போராளிகளை அந்த அரசே மன்னித்து விடுதலைசெய்யவேண்டும். இவர்கள் மீண்டும்சென்று தலைவருடன்சேர்துவிடுவார்கள் என்று ஏன் நினைக்கவில்லை?  அரசியற்காரணங்களிற்காக மன்னித்தது என்றால் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை ஏன் விடுதலைசெய்யவில்லை? சிந்தியுங்கள் இளைஞர்களே. புலிகளின் முக்கிய உறுப்பினர்களை விடுதலைசெய்தால் மறுபடியும் புலிகளை இவர்கள் ஒருங்கிணைக்கலாம் என்ன பயத்தால்தான் இன்றும் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ன உண்மையையை உணர்ந்துகொள்ளுங்கள். முள்ளிவாய்க்காலில் தோலிவியடைந்தோம்.
இது நாம் எதிர்பாராத ஒன்றுதான் முடிந்தது முடிந்தாதாக இருக்கட்டும். ஆனால் அடுத்தகட்ட போராட்டத்திற்கு யாரும் தயாராகக்கூடாது என்று சொல்ல யாருக்கு என்னதகுதி இருக்கின்றது. இன்று தமிழர்களின் கேவலமான வாழ்கைக்கு தலைவர் வருவார்என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். முள்ளிவாய்கால் தோல்வியை வெறுமனவே தலைவரின் தலையில் கட்டிவிடமுடியாது.
இன்றக்கு தலைவர் வருவார், வருவார் என்ற நம்பிக்கையை வெளியிடுவோர்தான் அன்றும் தலைவர் விடமாட்டார் விடமாட்டார் அவர்பார்த்துக்கொள்வார் என்று மனைவிமாரின் முந்தானையில் மறைந்திருந்தார்கள். இறுதியில் என்ன நடந்தது ஒரு தலைவனாக  என்னசெய்யமுடியும். எல்லாமே முடிந்துவிட்டது இன்றும் அதே பல்லவி தொடர்கிறது. நேற்றுவரை தலைவரின் இருப்பில்தான் போராட்டச்சக்கரம் சுழன்றது ஆனால் இன்று அதே தலைவரின் இருப்பில்த்தான் இன்று போராட்டம் தடைப்படுள்ளது.
தலைவர் இருக்கிறார்என்று கூறுவதன்மூலம் எதை நீங்கள் சாதிக்கப்போகிறீர்கள்? தலைவர் வெளியேறியதை ஓரளவு உறுதிப்படுத்துவபர்கள்கூட அவர்போய்சேரவேண்டிய இடத்தை அடைந்ததை உறுதிப்படுத்த முடியவில்லையே. உயிருடன்தான் உள்ளார்என்றால் இந்த இரண்டுவரிடத்தில் ஒரு சிறு அசைவுகூட ஏற்படாதாதது ஏன்? கடைசிவரை  போராடியவர்களிற்குக்கூட என்னநடந்தது என்று தெரியாமல்இருக்க புலம்பெயர்நாடுகளில் இருந்து புதியபுதிய கற்பனைக்கதைகள் வருகிறது.
யுத்தம் முடிந்து மூன்றுமாதத்துள்   அடிக்கடி நண்பர்கள் சொல்வார்கள் வன்னேரிக்காட்டுகுள் அவரின் ரீம் நிக்குதாம் மணலாற்றில் சண்டைநடந்ததாம் இரணைமடுவில் புலிகள் மக்களிடம் சாப்பாடுவாங்கிச்சாப்பிட்டார்களாம் என பல சுவையான கதைகள் வரும் இதில்லாம் எங்கேஇருந்து உருவாகுகின்றது என்றுபார்த்தால் எல்லாமே புலம்பெயர்நாடுகளில் வேலைவெட்டிஇல்லாமல் குந்திக்கொண்டு இருக்கும் சிலரின் வேலைஎன்பது தெரிந்தது.
இவற்றின் தொடர்ச்சியே இன்றய தலைவரும் புலிகளும் தொடர்பான செய்தி. எப்போதும் எமக்கு சாதகமான பதில்கிடைக்கும்போது மகிழ்ச்சியடைகின்றோம் அத்துடன் நிற்காது சிறிது சிறிதாக நம்ப தொடங்குகின்றோம். இச்செய்திகளை உருவாக்கியவரிற்தே திரும்பவும் அதே செய்தி புதிய பரிமானத்துடன் சென்றுசேரும்போது அதை அவரும் உண்மைதான் என்று நம்புகின்றார். இதெல்லாம் எவளவு முட்டாள்த்தனமானது என்பதை ஒருநாள் உணர்வீர்கள். இந்தியா தனது அரசியல்நலனிற்காக அடிக்கடி புலி புலி என பூச்சாண்டிகாட்ட நீங்களோ மகிழ்வின் உச்சத்திற்கு செல்கின்றீர்கள்.
உண்மையில் இந்தியாவில் புலிகளின் பயிற்சிமுகாமோ அல்லது செயற்பாடுகளோ இல்லை இது இந்தியஅரசிற்கு நன்குதெரியும். தப்பிச்சென்ற ஒரு சில உறுப்பினர்களும் தருணம்பார்த்து வெளிநாடுகளிற்கு செல்லவே முயற்சிக்கிறார்கள் தவிர நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் இந்தியாவில் இல்லை.
இன்று பலர் எழுதுகின்றனர் ‘தேசியத்தலைவரின் இருப்பை மறுதலித்து வரலாற்றுத்தவறு செய்யாதீர்கள் என்றும், தாமும் தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் தலைவர் இருக்கின்றார் என்று நம்பவைக்க படாத பாடுபடுபதாகவும் இப்போதுதான் எல்லோரும் நம்ப ஆரம்பித்துள்ளார்கள்’ என்றும் கூறுகின்றார்கள்.
சரி நீங்கள் சொல்வது உண்மைஎன்றால் ஏன் இன்று புலிகளின் சர்வதேச கட்டமைப்பு சிதைந்து தறிகெட்டுப்போய் ஒவ்வொருவரும் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுமந்தைக்கூட்டம்போல்  உள்ளனர். இன்றய தமிழரின் இழிவான நிலைக்கு சுயநலத்துடன்செயற்படும் சர்வதேசப்புலிகளே காரணம். இதில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களிற்கு சாதாரண துப்பாக்கியின் பாரம்கூட தெரியாதவர்கள்தான் இவர்கள் இன்று வீரவசணம் பேசி மக்களை ஏமாற்றி பிழையான வழியில் கொண்டுசெல்கின்றார்கள்.
இவர்களிற்கு ஜால்ரா போடுவதற்கெண்டு ஒரு கூட்டம் உள்ளது இவர்கள்எல்லோரும் தேசியசெயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள் என்னும் புதியபுதிய பெயர்களில் புதிதாக முளைக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாதிக்கு ஒரு கட்சி தெருவுக்குத்தெரு ஒரு கட்சிஎன்று உள்ளபோன்று புலம்பெயர் தமிழ் சமூகத்திலும் புதிய புதிய பெயர்களில் துதிபாடும் கூட்டங்கள் முளைவி;டத்தொடங்கிவிட்டது.
முள்ளிவாய்க்காலிற்கு முன் இருந்நதமாதிரியா இன்று சர்வதேச கட்டமைப்பு உள்ளது? தலைவர் சர்வதேச புலிகளுடன் தொடர்புகளைப்பேணாதா இன்னும்  இரகசியமாக கரும்புலிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்;? நீங்கள் சொல்கின்ற போல் முக்கிய தளபதிகள் பல ஆயிரம் போராளிகளும் தலைவருடன் இருக்கின்றார்கள் என்றால். சரணடைந்த போராளிளும் தளபதிகளும் தவிர்த்துப்பார்த்தால் ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த தளபதிகள்தான் உள்ளனர் இது தவிர இறுதிநாட்கள் சமரில் வீரச்சாவடைந்த தளபதிகள், அதையும்விட விரல்விட்டு எண்ணும் ஒரு சில தளபதிகள் சரணடையாது மக்களுடன்மக்களாக இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்று தனிப்பட்ட பொது வாழ்க்கையில்த்தான் ஈடுபடுகின்றார்கள்.
இவர்கள் எல்லோரையும்விட நீங்கள் சொல்லும் முக்கிய தளபதிகள் பலர் யார்? பல ஆயிரம் போராளிகள் யார்? மக்கள்மத்தியில் ஒரு பேச்சு உள்ளது அது பிரபாகரன்போல் இரண்டுபேர் உள்ளனராம் அதில் வெளியே திரிபவர் உண்மையான பிரபாகரன் இல்லையாம் என்று.
இது தான் உங்களின் வாதமுமா? ஆனால் தளபதிகளும் இரண்டு இரண்டுபேர் எப்படி இருந்தார்கள். வன்னியில் குளோனிங் தொழில்நுட்பம் அவ்வளவு வழர்ச்சியடைந்தா இருந்தது? கடைசிவரைக்கும் தப்பிப்போகும் அணிதெரடர்பாக தளபதி ரமேஸ் அண்ணனிற்கோ அல்லது தளபதி சொர்ணம் அண்ணனிற்கோ அல்லது அரசியற்பொறுப்பாளர்களிற்கோ அல்லது சரணடைந்த தளபதிகளிற்கோ எப்படி தெரியாமல்போனது? ஆனால் இன்று சர்வதேச புலிகளிற்கு எது உண்மை என்பது தெரியும். ஆனால் சொல்லமாட்டார்கள் அது அவர்களின் வயிற்றுப்பிளைப்பிற்கு ஆபத்து. இன்னும் எவ்வளவு காலத்திற்கு தமிழரின் தலையில் மிளகாய்அரைக்கப்போகின்றார்கள்.ஒன்றுமட்டும் கூறிவைக்கவிரும்புகின்றேன் நீங்கள் சொல்லும் கதைகள் தமிழீழத்திற்கான இராணுவபலத்ததை பூச்சியம்(0) என்ற நிலைக்குத்தான் கொண்டுபோயுள்ளது .
சிலர் தெரிந்தாலும் சொல்ல மறுக்கிறார்கள் யாரும் யதார்த்த நிலையை உணர மறுக்கிறார்கள். ஒரு வேளை தலைவர் நோயினால் யுத்தகளத்திற்குவெளியே மரணித்திருந்தால்கூட நீங்கள் சிங்கள அரசிற்கு எமது  பலவீனத்தை காட்டாது மறைக்கலாம்.ஆனால் அவனிற்கு எல்லா உண்மைகளும் தெரியுமே இனியும் எதற்காக ஏமாற்றுகிறீர்கள். இதேவார்த்தையைத்தான் இன்னும் 25 வரிடம்கடந்தாலும் சொல்வீர்கள் தலைவர் வருவார்என்று. இதில் ஐயா நெடுமாறனும் இணைந்துகொண்டதுதான் வேதனயாய் இருக்கிறது. இருந்தாலும் உங்களை மதிக்கிறோம் உங்கள் வயது உங்களை நம்பவைத்துவிட்டது. அவர் சொல்கின்றார் தலைவர் உயிருடனும் நலமுடனும் இருக்கின்றார். மீண்டும் வருவார் ஐந்தாம் கட்ட ஈழப்போரை நடத்துவார்.
அத்துடன் நின்றுவிடாது குறிப்பாக சுவிஸ்ஸர்லாந்து நாட்டில்வாழுகின்ற தமிழ்மக்களே உங்களை உரிமையுடன் கேட்கிறேன் என்று கூறுகின்றார் என்றால் தலைவர் சுவிஸில் வாழ்கின்றாரா? அப்படி வாழ்வதானால் இதைசொல்வது துரோகம் அல்லவா? அப்படியிருந்தும் சொல்லியிருக்கின்றார் என்றால் அதில் உண்மை இருக்குமா? நாளை எல்லாமே பொய் என்றாகும்போது எல்லோரும் வரலாற்றுத் தவறை சுமந்தவர்களாக கூனிக்குறுகி தமிழர்கள் மத்;தியில் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பர்.
அந்தநேரத்தில் அவர்சொல்லித்தான் நான்சொன்னேன் என்ற குற்றச்சாட்டையே மாறிமாறி கூறப்போகின்றார்கள்.
தலைவரிற்கு இப்போது அதாவது 2011 ல் வயது 57. ஆசியாவில் ஒரு சாதாரண மணிதனின் ஆயுட்காலம் அண்ணளவாக ஒரு 80 வயதுதான். இதில் எமது போருடன் கலந்த வாழ்க்கைக்கு இன்னும் குறையும். அத்துடன் தலைவரிற்கு இருந்த சில உடல் நோய்கள் அதிகபட்சம் 75 வயது வரை வாழமுடியும் எனவைத்துக்கொள்வோம் அதன்பின்? இந்த உலகத்தில் பிறந்த அத்தனை பேரும் ஓர் நாள் இறக்கத்தான் வேண்டும்.
இதிலிருந்து யாரும் தப்பமுடியாது. தலைவரும் ஓர்நாள் இறக்கநேரிடும். அது நிகழ்ந்ததாக இருக்கட்டுமே. ஒரு மனிதனாக பிறந்து கிட்டத்தட்ட 40 வரிடத்திற்குமேல் மக்களிற்காக போராடிய மாவீரனாக மரணித்த மகத்தான பிறவியாக நாம் கருதவேண்டும்.  மீண்டும் மீண்டும் தலைவர்தொடர்பான மற்றவர்களை முட்டாளாக்கும் கதைகளை வெளியிடுவதன்மூலம் நாம் தலைவர்மேல் வைத்திருக்கும் மரியாதையைத்தான் இழக்கநேரிடும். இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்த துரோகங்கள் ஓர்நாள் வெளியேவரும்.
அரசியற்காரணங்களிற்காக மறைக்கப்படும் உண்மைகள்கூட நீண்டகாலத்திற்கு மறைக்கமுடியாது எப்பவோ வெளிவரத்தான்போகின்றது. அப்போது நீங்கள் அதீத நம்பிக்கைவைத்திருந்த சில முன்னணித் தளபதிகள், சில பொறுப்பாளர்கள் கூட துரோகிகள் ஆகலாம் காலம் ஒரேஇடத்தில் யாருக்காகவும் தேங்கிநிற்பதில்லை.எனவே நான் அதிகம் நம்பும்  இளஞ்ஞர்களே தலைவரையோ அல்லது புலிகளையோ இனிமேல் எதிர்பார்க்காதீர்கள். ஒரு ஒப்பற்ற தலைவன் முள்ளிவாய்க்கால்வரை கொண்டுவந்த போராட்டம் தமிழீழம் என்கின்ற ஒரு இலற்சியத்தின் அரைவாசிப்பகுதியைக் கடந்தநிலையிலேயே விட்டுச்சென்றுள்ளார். அவர் இல்லாவிட்டாலும்கூட ‘விண்வெளியின் எல்லைக்குள் வேகமாக நுளையும் செயற்கைக்கோள் எந்தவேகத்துடன் புகுந்ததோ அதேவேகத்துடன் எந்தவித மேலதிக சக்தியும் இல்லாமல் தனது பாதையில் சுற்றிவருகிறதோ’ அதேபோல் தலைவரின் இலச்சியப்பயணம் இன்று தானாக பயணிக்கிறது சர்வதேச அரசியலில்.

இப்போதைக்கு எல்லோரும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். சில விசயங்கள் எங்களிற்கு எதிராக நடப்பதுபோல், சிலது எமக்கு சாதகமாகவும் நடக்கிறது. எனவே சாதகமானது நடக்கும்போது அதைநாம் சரியாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பொதுவாக விடுதலைப்போராட்டம்என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிவடையவேண்டும். மாறாக நீண்டுசென்றால் பல சிக்கல்களை உளவியல்ரீதியாக எதிர்கொள்ளவேண்டியநிலைஏற்படும் எமது விடுதலைப்போராட்டமும் இதேபிரச்சனையைத்தான் சந்தித்தது.”ஒரு விடுதலைப் போராளிஎன்பவனிற்கு ஒரே ஒரு இலச்சியந்தான் இருக்கமுடியும் அதே போல்      ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கவும்வேண்டும்“.

சில விரும்பத்தகாத விடயங்கள் நடந்து முடிந்துள்ளது அதை நான் திரும்பவும் கிளறி ஞாபகப்படுத்த விரும்பவில்லை. இன்று நேற்றய போராளிகள் பலர் சொல்லும் கருத்துக்கள் எல்லாவற்றையும ஒரு அனுபவத்தின் முதிர்ச்சிதான்என்று கொள்த்தேவையில்லை. பொதுவாக ஆயுதப்போராட்டத்தில், போராடும் வயது என்று ஒன்று உள்ளது அந்த வயதில்த்தான் முழுவேகத்துடன் போராடமுடியும். அந்த வயதைக்கடந்தவுடன் பல தேவைகள் எழுகின்றன அத்துடன் உடலும் பலவீனம் அடைகின்றது.

எனவே அந்த வயதைக்கடந்த நேரத்தில் போராட்ட வீரர்கள் பலர் தடம் மாறுகின்றார்கள். அதனால்த்தான் விடுதலைப்போராட்டத்தை பொதுவாக அந்தந்த அரசுகள் பேச்சுவார்த்தைஎன்றும் ஏனய சலுகைகளைக்காட்டியும் இழுத்தடித்து நீண்டகாலத்திற்கு கொண்டுசெல்கின்றனர். இவைஎல்லாமே எமக்கும்பொருந்தும். இன்று பல போராளிகள் ஆயுதப்போராட்டம் தோற்றதில்இருந்து பல கருத்துக்களைக்கூறிவரு கின்றனர்.
இனிமேல் ஓர் போராட்டம் தேவையில்லை என்றும், அப்படி ஆரம்பித்தாலும் வேற்றியடையாது என்றும், தருவதை வாங்கிக்கொண்டு பேசாது ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கவேண்டியதுதான்என்றும் கூறுகின்றனர். இதைவிட ஒருபடி மேல் சென்று கே.பி கூறியிருந்தார் தான் உயிருடன் இருக்கும்வரை ஒரு கிளர்ச்சி ஏற்பட விடமாட்டேன் என்று. இவை எல்லாம் அனுபவத்தால் கிடைத்த பாடங்கள் அல்ல.
இவை தம்மால் இனி சாதிக்க முடியாததை யாரும் செய்யக்கூடாது அப்படிநடந்தால் தாம் கோளைகளாகிவிடுவொம். தாம் செய்யமுடியாததை இன்னுமொருவர்செய்தால் தாம் இதுவரை செய்தது எல்லாம் பொய்யாகிவிடும் என்று நினைக்கிறார்கள். கருணாகூட விடுதலைப்புலிகள் அமைப்பில்இருந்து வெளியேறியபின் என்ன நினைத்தார்.தான் இல்லாத விடுதலைப்புலிகள் ஒருபோதும் வெற்றிபெறக்கூடாது.
அப்படி வெற்றிபெற்றால் தான் துரோகியாகி விடுவேன் அதுமட்டுமல்ல தன்னால்கிடைத்த ஒரு சில வெற்றிகளிற்குகூட தான் இல்லையென்றால் வெற்றிபெற்றிருக்கமுடியாது என்பதையும் காட்டநினைத்தே  முழு வேகத்துடன் இராணுவத்துடன் செயற்பட்டார். சமீபத்தில் கூட கருணா மட்டக்களப்பில் ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார் தான் அரசுடன் இணையாவிட்டால் மட்டக்களப்பு போராளிகள் பல ஆயிரம்பேர் முள்ளிவாய்க்காலில் இழக்கநேரிட்டிருக்கும் என்று குறிப்பிட்டதன்மூலம். தான் ஒரு தூரநோக்கோடு செயற்பட்டதாக காட்ட முனைகின்றார்.
Picture
எனவே இதுதான்விடயம் முதுமையடைந்த போராளிகள் கூறும் கருத்துக்கள் பெரும்பாலானவை சுயநலநோக்கத்தோடுதான் கூறுகின்றார்கள். இவர்கள் அடுத்த தலைமுறைக்கு போராட்டத்தை முழுமனதுடன் ஒப்படைக்க இப்போதும் தயாராக இல்லை. நீங்களே உங்களிற்கு தெரிந்த முன்நாள் போராளிகள் குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள குடும்பகாரப்போராளிகளுடன் அடுத்த கட்ட ஆயுதப்போராட்டம் தொடர்பாக கேட்டால் உங்களிற்கே புரியும் நான் சொல்ல வருவது உண்மையாஎன்று.
எனவே முன்னாள்போராளிகளின் சுயநலநோக்கத்தால்தான் பல தோல்விகள் ஏற்பட்டு விட்டன இதை எதற்காக சொல்கின்றேன் என்றால். இப்போது நீங்கள் நினைக்கும் புலிகள் அமைப்பில் உள்ளவர்கள் நான் சொல்லும் கருத்துக்குள் உள்ளடங்கும்போது எப்படி அடுத்தகட்ட போராட்டம் சாத்தியப்படும். நான் எல்லாப்போராளிகளையும் குறை சொல்ல வில்லை பெரும்பாலான குடும்பகாரப்போராளிகளையே சொல்கின்றேன். அவர்களையும் முழுமையாக குறைசொல்ல முடியவில்லை.
ஒரு போராளியின் வாழ்க்கை வேறு ஒரு சாதாரண குடும்ப காரனின்வாழ்கைவேறு இந்த உண்மையை உணரத்தவறியது தலைமை. ஒரு குடும்பகாரனின் கண்களில் தெரிவதெல்லாம் தனது குடும்பம், தனது மனைவிமீது வைத்திருக்கும் அன்பு, தனது பிள்ளையின் அன்பிற்கு ஏங்கும் அவனிற்கு முன்னால் இராணுவத்துக்கெதிராக போராடு என துப்பாக்கியை அவன் கையில் திணித்தால் அவனின் துப்பாக்கிக் குறிகாட்டியின் மையத்தில் தெரிவதெல்லாம் அவனின் மனைவியும் பிள்ளையும்தான் இப்போது அவன் என்ன செய்ய வாழ்வா சாவா என்ற முடிவிற்கு அவனால் வரமுடியவில்லை தான் எதிரியைநோக்கி சுடத்தொடங்கினால் எதிரியிற்கு தான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவான் எனவே தான்னைநோக்கி வரும் ரவைகள் தன்னைத்தாக்கினால் தான் மரணமடைந்தால் தனது குடும்பம் அனாதையாகும்.
இப்போதக்கு அவன் என்னசெய்ய முடியும்? இதில் யார் குற்றவாளி? அதனால்த்தான் சொன்னேன் ‘ஒரு விடுதலைப் போராளிஎன்பவனிற்கு ஒரே ஒரு இலச்சியந்தான் இருக்கமுடியும் அதேபோல் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கவும்வேண்டும்’. அடுத்து களமுனைக்கு அப்பால் வாழும் ஒரு குடும்பகாரப்போராளிக்கு இந்த சமூகத்துடன் சேர்ந்து வாழ்கின்றான் வழர்ந்துவரும் தொழிநுட்பத்திற்கேற்ப ஆசைகளும் வழர்கின்றன எனவே பணத்திற்கான தேவை அதிகரிக்கின்றது. அவனிற்கு மாதாந்தம் கொடுக்கப்படும் குடும்பக்கொடுப்பனவு போதவில்லை. இப்போது அவனிற்கு இரண்டு வழிகள் உள்ளது.

ஒன்று இயக்க நிதியை மோசடிசெய்வது இல்லையேல் எதிரிக்கு தகவல்கொடுத்து பணம் சம்பாதிப்பது.இப்போது இவன் துரோகியாகின்றான். இதில் யார் குற்றவாளி? இன்றும் துரோகிகளின் சக்கரம் மிக வேகமாக சுழல காரணம் இதுதான். அதிகாரம் உள்ளவர்கள்கூட அதை தவறாகபயன்படுதினர்.
அதனால்தான் சொல்கின்றேன் ‘ஒரு விடுதலைப் போராளிஎன்பவனிற்கு ஒரே ஒரு இலச்சியந்தான் இருக்கமுடியும் அதேபோல் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கவும்வேண்டும்’.  ‘எல்லா குடும்பகாரர்களும் துரோகிகளோ, கோளைகளோ அல்ல இதிலும் குடும்பத்துடன் வீரமாக போராடியவர்களும், உண்மையாக புனிதமாக போராடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் பெரும்பான்மைதான் ஒரு முடிவைத்தீர்மானிக்கிறது உண்மையைச்சொல்லித்தான் ஆகவேண்டும். சில நிரபராதிகளிற்காக குற்றவாளிகள் தொடர்ந்து குற்றஞ்செய்ய அனுமதிக்கமுடியாது.’
எனவே எனது அன்பான இளஞ்ஞர்களே! ஒவ்வொரு இளஞ்ஞனுக்குள்ளும் அதிவேகமாக பாயும் இரத்தம் ஒரு இலச்சியத்தை நோக்கியதாக இருக்கவேண்டும்.
எமக்கான வாழ்கைஎன்பது எமக்கான உரிமையிலேயே உள்ளது. அகதிகளாக எவ்வளவு தூரம் ஓடப்போகிறீர்கள் ஓடிப்போய் அகதியாக வாழ்வதுகூட ஓர் வாழ்க்கையா? அந்தந்த நாடுகளில் உங்களை இரண்டாம்தர பிரயையாகவே பார்கின்றனர் அன்னாட்டவர் மொழியைமறந்து எந்தஅடையாளத்தை நீ பேணிநாலும் நீயும் ஓர் அகதிஎன்பது உங்களிற்குதெரியாதா? ஈழத்தமிழரிற்காக குரல்கொடுப்பதாக சொல்லும் தமிழிநாட்டில்கூட சிலோன்காரன் என்றால் வெறுப்பாகவும் கேவலமாகவும் இன்னும்சிலர் அருவருப்பாகவும் பார்க்கின்றனர்.
இதற்காக யாருமே சிலோன்காரர் என்று கூற முன்வருவதில்லை பதிலிற்கு கேரளாக்காரன் என்றே கூறுபவர் சிலோன்காரரிற்கு யாரும் வேலைகொடுக்க முன்வருவதில்லை குறைந்தபட்சம் வாடகைக்குக்கூட வீடுகொடுக்க முன்வரமாட்டார்கள். இந்தநிலையிலும் பல ஆயிரம்பேர் செந்தமாக வீடு,காணி,கார் என்று வெளிநாட்டுப்பணங்களைக்கொண்டு பந்தா காட்டுபவர்களும் கேட்டால் நாம் சிலோன் இல்லை இந்திய குடிமக்கள் என்கிறனர்.
இந்தநிலை தொடரவேண்டுமா? ஈழத்தில் என்ன நடக்கின்றது.”நேற்றுவரையும் புலிகளின் வால்களை பிடித்துக்கொண்டு திரிந்தவர்கள் எல்லாம் இப்போ இராணுவப்புலனாய்வாளர்களாம், EPDPஆம். நாங்கள் யாரையெல்லாம் கோழைகளாக பார்த்தோமோ அவர்கள் எல்லோரையும்பார்த்து வீரர்கள் பயப்படவேண்டுமாம். நேற்றுவரை விடுதலைக்காக போராடுகின்றோமென்றவர்களில் பலர் இன்று இராணுவத்துடனும் இராணுவபுலனாய்வுப்பிரிவுடனும் எந்த விடுதலைக்கு போராடுகின்றனர்?. யாரைப்பார்த்து முன்பு மக்கள் பயந்தார்களோ அவர்களைப்பார்த்து இப்போதும் அதேமக்கள் பயப்படுகின்றார்கள். இந்த நிலை தொடரவேண்டுமா?”

அன்பான நண்பர்களே உனது அப்பா போராடாது இருந்திருக்கலாம் உனது அண்ணன்கூட போராடாது இருந்திருக்கலாம் ஆனால் நீ போராடத்தான்வேண்டும். இது உனக்காக அல்ல உனது அடுத்த சந்ததியான உனது அண்ண்மகன்களிற்காகவாக இருக்கட்டுமே.

இன்று நீ போராடாது அடிமையாக வாழ்வதும்கூட நீ அடுத்த சந்ததியிற்கு செய்யும் மாபெரும் துரோகமே என்பதைமறந்து விடாதே. உங்களிற்குள்ளே ஆயிரம் வேற்றுமைகள் ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம் முதலில் நான் என்பதை நாம் ஆக்குவோம். இதுவரை எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
இப்போதும் பலர் தாம் போராட்டப்பயணத்தில் சுமந்த சுமைகளை சொல்லிப்பெருமைப்படுவர் ஆனால் இனிமேல் அதைவிடவும் அதிகமாக சுமக்க நீங்கள் ஒவ்வொருவரும் தயாராகவேண்டும். எமது அன்பான இளம் சமூகம் சிந்தித்து முடிவெடுங்கள் இப்போதுள்ள நிலைமையை மாற்ற  உடம்லில் வெடிகுண்டு தேலையில்லை கழுத்தில் சயனைட்குப்பி தேலையில்லை  சாத்தியப்படக்கூடிய வழியில் முயற்சிசெய்தால் எல்லாவற்றையும் மாற்றலாம். இளமைக்காலம் என்பது மிகக்குறைந்தது அதில்தான் சாதிக்கமுடியும். இப்போது செய்யாவிடின் உங்களால் எப்போதும் எதையும் செய்ய முடியாது.
Picture
இன்று போர்க்குற்ற அறிக்கை வெளிவந்து பல மாதங்களாகின்றது முன்பெல்லாம் அதைப்பற்றிய பேச்சுத்தான் இப்போது யாருமே அதைப்பற்றி பேசுவதில்லை. உண்மையில் இன்றய உலகம் போர்குற்றவாளிகளை தண்டிக்க நினைக்கிறதா? இந்த உலகம் நியாயம் நீதி என்று இயங்குகின்றதா? இதற்கான விடையை தலைவரே பல வரிடங்களிற்கு முன் சொல்லிவிட்டார். இந்த உலகம் நீதி நியாயம் என்று எப்போதும் செயற்படுவதில்லை ஒவ்வொரு நாடும் தனது நலனிலேயே குறியாய் உள்ளது என்று உண்மைதான்.
இதுதான் இப்போதும் நடக்கிறது. போர்க்குற்றத்தை விசாரிக்க இன்று கோவணத்தை இழுத்துக்கட்டும் சர்வதேச நாடுகள் அன்று போர்நடக்கும்போது எங்கே போனார்கள்? உலகெல்லாம தமிழர்கள் தெருத்தெருவாக போராடிநார்களே ஐ.நா சபைகூட திரும்பிப்பார்க்க வில்லை ஒப்புக்கு ஒரு அறிக்கையை விட்டுட்டி இருந்த சர்வதேசம் இன்று போர்குற்றத்தை விசாரிக்க காரணம்என்ன திடீரென்று தமிழர்களின்மேல் அக்கறைஏற்பட காரணம் என்ன? உண்மையில் போர்க்குற்ற விசாரணை விசாரிக்கப்படுகிதோ இல்லையோ அது அவர்களிற்கு முக்கியமில்லை.
இப்போது நடப்பது எங்களின் சமூகத்திற்குள் நடக்கும் ஒரு அருவருக்கத்தக்க பிளைக்மெயில்தான் இப்போதும் நடக்கிறது.சட்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமான உறவை வைத்திருக்கும் குறித்த பெண்ணையோ அல்லது ஆணயோ  ஒளிந்திருந்து புகைப்படமெடுத்து அந்த புகைப்படத்தைக்காட்டிக்காட்டி தனதுதேவையை நிறைவேற்றும். மிரட்டலாளர்களின் செயலையே இன்று சர்வதேசம் செய்கின்றது. சர்வதேசத்திடம் இன்று இலங்கையின் போர்க்குற்ற ஆதார புகைப்பட மற்றும் வீடியோ உள்ளது.அதைவைத்து மிரட்டி மிரட்டி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அமேரிக்காபோன்ற நாடுகள் நினைக்கின்றன. இன்று சர்வதேசம் என்பது எது அது வேறொன்றும் இல்லை ஒரே ஒரு நாடுதான் அது தான் அமெரிக்கா.

ஒரு காலத்தில் பிரித்தானியா இருந்தது இப்போது அமெரிக்கா இருக்குது. அமெரிக்காவிற்கு இப்போதுள்ள பிரச்சனை என்ன வென்றுபார்த்தால் அது வேகமாக வழர்ந்துவரும் சீனாவே அதற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உலகமே பஞ்சத்தில் வாடிநாலும் பத்துவரிடத்திற்து தனது நாட்டு மக்களிற்கு உணவளிக்கக்கூடிய உணவுஉள்ளது அடுத்து என்னதான் தொழில்நுட்பம் வழர்ந்தாலும் எரிபொருள்இல்லாது எதையும் செய்யமுடியாது.
அணுமின்சக்திக்குக்கூட நிலக்கரி தேவையாகஉள்ளது எனவே. அடுத்து அமெரிக்கா எரிபொருள் தேடியது அது தாராளமாக இப்போது கிடைத்துவிட்டது இப்போது எரிபொருள் அதிகம் உள்ள நாடுகள் அமெரிக்காவின் மறைமுக ஆட்சிக்குள் வந்துவிட்டது. இப்போது 193ஆவதாக சுதந்திரமடைந்த நாடு கிழக்குத்திமோர்கூட எண்ணைவழநாடாகஇருக்கும் என்ற  பேச்சு உள்ளது. எனவே அமெரிக்கா தேடிய எண்ணைவழம் தேடியதைவிட அதிகமாகவே அமேரிக்காவிற்கு கிடைத்துள்ளது. அடுத்து தன்னுடைய எல்லையை விஸ்த்தரித்து உலகின் ஏகபோஉரிமையை எடுத்துக்கொள்வது. உலகத்தின் பஞ்சாயத்து தலைவராக பிரதானமாக சவாலாகஉள்ள நாடு சீனா எனவே சீனாவின் வழர்ச்சியைத்தடுக்க அமெரிக்கா இப்போது விரும்புகின்றது. இதற்காகவே அமெரிக்கா அதாவது சர்வதேசம் இலங்கையை பயன்படுத்த நினைக்கின்றது.
உண்மையில் போர்க்குற்றவிசாரணை விசாரித்து மகிந்தவை தூக்கிலை தொங்க தீர்ப்பு வழங்கப்படுகின்றது என்றால்.  என்ன நடக்கும் இப்போது அமைதியாக இருக்கும் மகிந்த கூட்டம் தூக்குக்கயிறு கழுத்தை நெருங்கிவர யார்யார் எவ்வௌ;போது தமக்கு உதவினர் இந்த யுத்தத்தை பின்னின்று நடத்தியது யார்என்பதை அப்போது சொல்லுவர். இந்தஇடத்தில் இந்தியாமட்டும் தான் உதவிசெய்யவில்லை இலங்கைக்கு அமெரிக்கா,பாகிஸ்தான், ஸ்ரேல்போன்ற பல நாடுகள் இந்த யுத்தத்திற்கு பின்னால் உள்ளளர். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்கூட அமெரிக்காவால் உற்பத்திசெய்ததாககூட இருக்கலாம். இப்போது தூக்கில் யார்யார் தொங்கப்போகிறார்கள்.
மகிந்தா மன்மோகன்சிங் பராக்ஒபாமா இன்னும் சிலர் சேரலாம். இதில்லாம் நடக்குமா நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. எனவே இதுதான் உண்மை யாரையும் யாரும் தூக்கில்போடப்போவதில்லை சும்மா பம்மாத்துக்கு விசாரணைகள்கூட நடக்கலாம். எதுவுமே எமக்கு பயனில்லை மொத்தத்தில் எமது தலையிலே எமது கைகளால் மிளகாய்அரைக்க நினைக்குது சர்வதேசம். நாமோ அவரவர் பாட்டில் களியாட்டங்களும் கூத்தும்கும்மாளமும் என்று தமிழர் இருப்பதுதான் வேதனையாக உள்ளது.
இன்றய சூழலில் செய்யவேண்டிய வேலைகள் எமக்குமுன் மலையென நிற்கிறது. அதை முடிந்தளவு வேகமாக முன்னெடுத்துச்செல்ல ஒவ்வொருவரும் சுயநலம்இல்லாது முன்வரவேண்டும்.ஒரு பாதை மூடும்போதுதான் இன்னுமொருபாதை திறக்கின்றது திறக்கும் புதியபாதையில் பயணிக்கப்போகினன்றோமா அல்லது இன்னும் குருட்டு நம்பிக்கையுடன் இருக்கப்போகின்றோமா? மதிப்பிற்குரிய இளம் புரட்சியாளர்களே! என்றுமில்லாதவாறு தமிழர்களிற்கு ஒரு சாதகமான நிலைமை இன்று நெருங்கிவருகின்றது. இத்தருணத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இதுவரை புலிகளுடன் பயணித்த நாம் இனி எமக்கான ஒரு புதியபாதையை உருவாக்கிக்கௌ;ளவேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்காலின் பின் புலிகளின் செயற்பாடுகள் தமிழர்களின் எதிர்ககாலத்தை தீர்மானிக்கும் தகமையை இழந்துவிட்டார்கள். அதைவிட கடந்தகாலங்களில் புலிகள் பல தவறிளைத்தாலும், தமிழர்களிடம் உள்ள ஒரே இராணுவபலமாக புலிகள் திகழ்ந்தாலும்  தலைவர் பிராபாகரனின் தன்னிகரற்ற வல்லமையாலும் புலிகள் அமைப்புடன் இணைந்து பயணித்தோம், ஆனால் இன்று இராணுவபலத்தை மட்டுமல்லாது பிரபாகரனையும் இழந்துநிற்கிறது விடுதலைப்புலிகள் அமைப்பு.

புலிகள் அமைப்பு இறுதிக்காலங்களில் மக்களுடன் நடந்துகொண்ட விதம், இப்போது அம்மக்களிடமிருந்தும் சர்வதேசத்திடம் இருந்தும் அன்னியப்பட்டு நிற்கின்றது. எனவே ஒரு சிக்கலாக  அரசியற்பின்னணியுடன் உள்ள புலிகள் அமைப்பால் சர்வதேசஅளவிலான அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை.

எப்படியோ இனி புதிதாகத்தான் எமக்கான இராணுவ பலத்தை உருவாக்கப்போகின்றோம், எனவே பலப்படுத்தவேண்டியிருக்கும் தமிழர்களின் இராணுவபலம் புதிய ஒரு அமைப்பூடாக கொண்டுசென்றால்த்தான் நாம் வெற்றிபெற முடியும் இந்த யதார்த்த நிலைமையை உணர்ந்துகொள்ளாமல்
நாம் முட்டாள்த்தனமாக ஏதாவது செய்தால் மாபெரும் அரசியல் சிக்கலிற்குள் தள்ளப்படுவேம். இதனால் இனிமேல் தமிழர்களின் அரசியற்போராட்டம் வெறும் பயங்கரவாதந்தான் என்ற முடிவிற்கு சர்வதேச சமூகம் வந்துவிடும். இதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே இனிமேல் யார்வந்தாலும் புலிகளை நாம் ஏற்கவேண்டியதில்லை. அன்பான மக்களே நீங்கள் சுயமாக சிந்திக்கமாட்டீர்களா சிந்தியுங்கள் இதுவரை தன்னலமில்லாது போராடி மடிந்த மாவீரர்கள் மகத்தானவர்கள். ஆனால் இன்றய புலிகளின் செயற்பாடுகளும், தற்போதுள்ள அரசியற்சிக்கல்களாலும் நாம்  எமக்கான புதிய சக்தியை உருவாக்கித்தான் ஆகவேண்டும.; உண்மையான அரசியல்சிக்கலை உணர்ந்துகொண்டு புலி என்ற மாயையிலிருந்து முதலில் வெளியே வரருங்கள். இந்த வரலாற்று பாதையிருந்து இளம்தலைமுறையிர்  ஒதுங்கிநிற்காது அனைத்து இளஞ்ஞர்களும் தாமாக முன்வரவேண்டும்.

தமிழர்களிற்கு தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக மனச்சாட்சிகள் உண்மையாக உணரத்தொடங்கியுள்ளது. இந்தத்தருணத்தில் மீண்டும் நாம் பட்டறிவில்லாமல் துப்பாக்கியைத்தூக்கினால்; தமிழர்களின் தலைவிதியே தலைகீழாக மாறிவிடும். ஏர்கனவே பயங்கரவாத சாயம் பூசப்பட்ட தமிழர்களின் நியாயமான போராட்டம் மேலும் சிக்கலாகிவிடும். எனவே தற்போது செய்யக்கூடியவேலை நிறையவேஉள்ளது நியாயமான வழிகளில் சாத்தியப்படக்கூடிய வழிகளில் ஓரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இலக்கை அடையக்கூடியவாறு சரியாக காய்களைநகர்த்தி முயற்சிசெய்தால் நிச்சயம் இலகுவாக வெற்றிபெறலாம்.

தமிழீழத்ததை அடைய இறுதியாக செய்யவேண்டிய ஒன்றே ஆயுதப்புரட்சி அதன்மூலம்தான் தமிழீழத்தை அடைய முடியும். அதைஅடைய அதுவரைக்கும் நகர்த்தவேண்டிய காய்களும், செய்யவேண்டிய வேலைகள் நிறையவே உள்ளது. சாத்தியமான மார்க்கங்களில் இன்னும் நாம் சரியாக முயற்சிசெய்யவில்லை. நாங்கள் முயற்சிசெய்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். இளஞ்ஞர்களின் எழிச்சியே புதியதொரு புரட்சிக்கு வழிவகுக்கும். உங்களின்கையில்த்தான் நாளைய தமிழனின் தலைவிதி உள்ளது. இதுவே உண்மையில் தலைவர் பிரபாகரனிற்கும் இதுவரை விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்களுக்கும் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.

அன்பான தமிழீழ மக்களே இன்றைக்கு தமிழர்களின் இராணுவபலம் இல்லாதகாரணத்தால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக தன் இனத்தையே காட்டிக்கொடுத்து சொகுசான வாழ்கையை வாழ்ந்துவருகின்றனர். உலக விடுதலை வரலாற்றில் யாருமே எதிர்நோக்காத துயரம் எமது இனம் எதிர்நோக்கக்காரணம் என்ன சிங்களவனா? இல்லை சர்வதேசமா? இல்லவே இல்லை தமிழனே தமிழன் விடுதலைக்குத்தடையாக இருக்கின்றான.; சிங்களவனை வெல்வது மிகவும் சுலபம் இது சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு நன்கு தெரியும். இதனால்தான் ஆரம்பம்முதல் மாறிமாறி துரோகிகளின் சக்கரம் சுழல்கின்றது.

இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான துரோகக்கூட்டங்களை கொண்ட ஒரே இனம் ஈழத்தமிழினம்தான். விடுதலை என்பது மிகப்பெரிய பயணம் இதில் இன்று உள்ள நிலைமை மாறவேண்டுமானால் இளஞ்ஞர்களின் எழிச்சியே புதியதொரு புரட்சிக்கு வழிவகுக்கும். தமிழீழத்திற்காக எந்தவொரு சுயநலனும் இல்லாது வீரமரணம் அடைந்தவீரர்களை ஒருதடைவை நினைத்துப்பாருங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்ததைபார்த்தும் உணர்ச்சி பிறக்கவில்லையென்றால் தமிழனாக அல்ல ஒரு மனிதனாகவே இருக்கவே தகுதியில்லை. எனவே மீண்டும் சொல்கின்றேன் இளம்தலைமுறை சிந்திக்காதவரை எதுவுமே மாறப்போவதில்லை.

ஆனாலும் நீங்கள் சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது சிந்தியுங்கள் சேர்ந்தே பயணிப்போம். உலகத்தில் எங்கெல்லாம் அடக்குமுறையும் இன அழிப்பும் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆயுதக்கிழர்ச்சி நிச்சயம் வெடிக்கும் அதைதடுக்க யாராலும் முடியாது’.

SHARE