ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ‘செட்டியோராரி’ எழுத்தானை மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையில் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு நிகாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.