219 நாடுகளின் கொடிகளுடன் மேம்பாலத்தில் நின்று புதிய உலக சாதனை

568
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக மேம்பாலத்தில் (ஹார்பர் ப்ரிட்ஜ்) 219 சர்வதேச கொடிகளுடன் 340 பேர் ஒரே நேரத்தில் ஏறி நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

ரோட்டரி இயக்கத்தை சேர்ந்த இவர்கள் நேற்று நிகழ்த்திய இந்த சாதனையின் மூலம், ஹாலிவுட் நடிகை ஓப்ரா வின்ஃப்ரே தலைமையில், போலியோ ஒழிப்பு நிதிக்காக 143 நாடுகளின் கொடிகளுடன் 316 பேர், கடந்த 2008-ம் ஆண்டு இதே பாலத்தின் மீது ஏறி நின்று நிகழ்த்திய முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

SHARE