22 வயது நடிகை மட்டுமில்ல! வின்டேஜ் நடிகைகளுடனும் கைகோர்க்கும் நடிகர் அஜித்..

450

 

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படப்பிடிப்பு மே முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. படத்திற்கான நடிகர், நடிகைகள் கேஸ்டிங் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

வின்டேஜ் நடிகைகளுடனும் அஜித்
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக மாறியுள்ள ஸ்ரீலீலா இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் அஜித்துடன் இரண்டு வின்டேஜ் கதாநாயகிகள் இணைகிறார்களாம். அவர்கள் வேறு யாருமில்லை மீனா மற்றும் சிம்ரன் தான். ஆம், அஜித்துடன் 90ஸில் ஜோடிபோட்டு நடத்த மீனா மற்றும் சிம்ரன் இருவரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

மே 1 அஜித் பிறந்தநாளில் குட் பேட் அக்லி படத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

SHARE