23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

273
கொரோனா பீதி: இலங்கையில் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ்
சீனாவில் தோன்றி மூன்றே மாதங்களில் உலகம் முழுவதும் பரவி ஊழித்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை

இந்தியாவின் அண்டைநாடான இலங்கையில் 25 வெளிநாட்டினர் உள்பட 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பிறபகுதிகளுக்கு வேகமாக பரவுவதை தவிர்க்கும் வகையில் இன்று மாலை 6 மணியில் இருந்து வரும் திங்கட்கிழமை (23-ம் தேதி) காலை 6 மணி வரையில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இலங்கை அதிபர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா பீதியால் இலங்கை பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

SHARE