ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு

681

 

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும்.இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்தசுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங் களை இது கொடுக்கலாம்.இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சில பெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக்கொடுக்கலாம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்ற து அவர்கள் கூச்சப்பட்டு வெளியில்சொல்ல முடியாமல் மனதி ற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவ ங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்தி ருக்க வேண்டியது அவசியமாகும்.

10928194_748573905257638_8238545259418936184_n

ஏனெ றால் சில நோய்களில் கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம்.சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.சாதாரணமாக வெளிவரும் திரவம்மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலு றவின் போது,கர்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங் களில் அதிகரிக்கலாம்.ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமானதுபச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடைய தாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறி குறியாக இருக்கலாம். இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டா லே போதும் இந்தப் பிரச்சினை சுகமா கி விடும். இது பொதுவாக கிருமி களின் தொற்றுகளால் ஏற்படும்.மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக, அல்லதுஇடையிடையே ரத்தம் போகு ம்போது இது புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம்.பெண்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந் தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங் கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டு மல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப் புறுப்பை சுத்தமாக வைத்தி ருக்க ஏற்படுகி ன்ற சாதாரணமான நிகழ்வே! இதற்காக அச்சப் படத்தேவை இல்லை.

SHARE