2500 யூரோவுக்கு சாப்பிடும் முயல்

788
இங்கிலாந்தில் உள்ள வொர்க்க்ஷையர் மாகாணத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் தனது செல்லப்பிராணியாக முயலை வளர்த்து வருகிறார்.டேரியஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. இது சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம் கொண்டதாகும்.

குறித்த முயல் உணவாக தினமும் 12 கேரட்டுகளை சாப்பிடுகிறது. அப்படியெனில் இது வருடத்திற்கு சுமார் 4000 கேரட்டுகளை சாப்பிட்டு வருகிறது.

இது குறித்து அதன் உரிமையாளர் கூறுகையில்

“டேரியஸை பராமரிப்பதற்கு மட்டும் வருடத்திற்கு 2500 யூரோ செலவாகிறது. இது மிகவும் பேராசை பிடித்தது. சாப்பிடுவதை ஒருபோதும் இது நிறுத்தாது. ஆனாலும் டேரியஸ் ஆரோக்கியமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

SHARE