3 மொழிகளில் வந்தால்

775
ஸ்வாதி சினி பிரேம்ஸ் சார்பில் கே.ரவிகணபதி, நத்தம் வி.ஜில்.பாபுராஜ் தயாரிக்கும் படம், வந்தால். புதுமுகம் விஸ்வா ஹீரோ. இன்னொரு ஹீரோவாக வியஜ்ராஜ் நடிக்கிறார். ஆருஷி ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, தலைவாசல் விஜய், டெல்லிகணேஷ், சுமன் ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.புனித்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, நட்புக்குள் காதல் வந்தால் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதுதான் படம். இதில் வில்லனோ, ஜாதி பிரச்னையோ எதும் காதலை பிரிக்காது. சூழ்நிலைகள் காதலை என்ன செய்கிறது என்பதை சொல்லியிருக்கிறேன். மலைகிராமத்தில் நடக்கும் கதை. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில்  தயாராகிறது. மூணாறு மற்றும் கொடைக்கானலில் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் 10ம் தேதி மகாராஷ்ட்ராவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது என்றார்

 

SHARE