3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை முன்னணி வீரர்.., ஏன் தெரியுமா?

152

 

3 வருடங்களுக்கு பிறகு இலங்கை முன்னணி வீரர் ஒருவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை Vs வங்காள தேசம்
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 தொடரானது வரும் மார்ச் 4 -ம் திகதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அணியில் இடம்பெற்றிருந்த குசல் பெரேரா (Kusal Janith Perera) உடல் நலக்குறைவு காரணமாக விலகினார்.

இலங்கை அணியில் மாற்றம்
இதனால், முன்னணி வீரரான நிரோஷன் டிக்வெல்லா (Niroshan Dickwella ) மீண்டும் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், 3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 -ம் ஆண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடிய இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி விவரம்
* சரித் அசலன்கா (Charith Asalanka)

* வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)

* குசல் மெண்டிஸ் (Kusal Mendis)

* சதீரா சமரவிக்ரம (Sadeera Samarawickrama)

* மேத்யூஸ் (Mathews)

* தீக்சனா (Theekshana)

* தனஞ்சயா டி சில்வா (Dhananjaya de Silva)

* நிரோஷன் டிக்வெல்லா (Niroshan Dickwella)

* மதுஷங்கா (Madushanka)

* நுவான் துஷாரா (Nuwan Thushara)

* பதிரனா (Pathirana)

* அகிலா தனஞ்சயா (Akila Dananjaya)

* பினுரா பெர்னண்டோ (Binura Fernando)

* கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis)

* அவிஷ்கா பெர்னண்டோ (Awishka Fernando)

* ஜெப்ரி வாண்டர்சே (Jeffrey Vandersay)

SHARE