300 முட்டைகளை கொண்டு ருசியான முட்டை குழம்பு ! இணைய நட்சத்திரமாக மாறிய தமிழர்

570

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

தமிழர் ஒருவர் 300 முட்டைகளை கொண்டு முட்டை குழம்பு சமைத்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

கடந்த நவம்பர் 3ம் திகதி Village food factory தனது யூடியூப் பக்கத்தில் குறித்த வீடியோவை வெளியிட்டது.

அதில், தமிழர் ஒருவர் சுமார் 304 முட்டைகளை பயன்படுத்தி முட்டை குழம்பு வைக்கிறார். முதலில் அவர் பாதி முட்டைகளை வேக வைத்து தோலை உரித்து முட்டைகள் மீது மஞ்சள் தூள் ஈடுகிறார்.

பின்னர், வழக்கம் போல் குழம்பு கூட்டி அதில் பாதி முட்டைகளை உடைத்து ஊத்தி சமைக்கிறார். சமைத்து முடித்ததும் வாழை இலையில் முட்டை குழம்பை சாதத்துடன் உண்டு ருசிக்கிறார்.

பின்னர், சமைத்த முட்டை குழம்பை குட்டி நாய்களுக்கு அளிக்கிறார். 15 நிமிட வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

பலர் இதை சமூக வலைதளத்திலும் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் குறித்த தமிழர் இணைய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

SHARE