தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் துப்பறிவாளன் 2.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் வருகிற 2026 தேர்தலில் களமிறங்குவேன் என விஷால் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலும் 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் கூட இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை போகவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர். திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே, நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் என பதிலை கூறிவிடுகிறார்.
வரலக்ஷ்மி – விஷால்
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஷாலிடம் வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் ” வரலக்ஷ்மியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகிறேன். அவர் தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை அமைத்திருக்கிறார். திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு பிறகு ஹனுமான் படத்தில் வரலக்ஷ்மியின் கேரக்டர் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவரை நினைந்து நான் மகிழ்ச்சியாகிறேன். அவருடைய கேரியரை தாண்டி அடுத்த கட்டத்திற்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்” என பேசினார் விஷால்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷாலும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் கைகூடவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.