3950 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

447

கிரேண்ட்பாஸ் பகுதியில் 3950 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் – ஜோஷப் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு – 12 சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

பொலிஸார் சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE