3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம்.
லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார், இவரை தாண்டி பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்திருக்கிறார்.
மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் என பலர் நடித்திருக்கும் இந்த படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி மாஸாக வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சில விஷயங்கள் புரொமோஷனாகவே அமைந்தது.
பட வசூல்
மத அரசியல், கிரிக்கெட் விளையாட்டு என சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களும் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்.
ரூ. 80 முதல் ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.