44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்

153

 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்பதை அறிவோம். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இரண்டாம் திருமணம்
இந்த நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது என தெலுங்கு திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது நடிகர் சித்தார்த்துக்கு இரண்டாம் திருமணம் ஆகும். ஏற்கனவே மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து 2007ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE