தென்னிந்திய சினிமாவில் திடீரென்று வந்து ஒரு கலக்கு கலக்கியவர் அஞ்சலி. ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் திரையுலகை விட்டு கொஞ்ச நாட்கள் தள்ளியிருந்தார்.
தற்போது பழசையெல்லாம் மறந்து புதிய மேனஜர் ஒருவரை வைத்து மறுபடியும் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் நம்ம அஞ்சலி. தற்போது கோனா வெங்கட்டின் தெலுங்கு படம் ஒன்றில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.