அட்லீ விஜய்யை வைத்து விளையாட்டை மையப்படுத்தி ஒரு பெரிய படம் எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று விஜய் கேட்கவே சென்னையிலேயே படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. பெரிய ஸ்டூடியோவில் விளையாட்டு மைதான செட் போட்டு படப்பிடிப்பின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.
விஜய் பயிற்சியாளராக நடிக்க 16 பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக் கொண்டு இருந்தாராம் சஞ்சனா சாரதி. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த இவர் ஒரு பேட்டியில், அட்லீ-விஜய் படத்தில் சின்ன வேடத்திலாவது கூப்பிடுவார்களோ என ஏங்கிக் கொண்டிருந்தேன், இப்போது வரை இல்லை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
5 நிமிடம் விஜய்யுடன் வந்து சென்றால் கூட போதும் என்று கூறியுள்ளார்.