5 நிறங்களில் இனி வாட்ஸ் அப்: புதிய அப்டேட்டை வெளியிட்ட மெட்டா

169

 

வாட்ஸ் அப் நிறுவனம் பல வண்ணங்களுடன் கூடிய புதிய தீம் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
தகவல் பரிமாற்றத்திற்கான சமூக செயலியான வாட்ஸ் அப்பை பில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உபயோகித்து வருகின்றனர்.

அதற்கேற்ப வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட்டை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

அந்த வகையில் தற்போது பல வண்ணங்கள் கொண்ட தீம் அமைப்பை வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல வண்ணங்களில் வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் தீம்களுக்காக பச்சை, நீலம், வெண்மை, பவளம் மற்றும் பர்ப்பிள் ஆகிய ஐந்து நிறங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பயனர்கள் அதில் ஏதேனும் ஒரு நிறத்தை தேர்வு செய்து தங்களுடைய வாட்ஸ் அப் செயலியின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் வாட்ஸ் அப்பின் பின்னணி இனி வண்ணமயமாக காணப்படும், பார்வை குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட வண்ணத்தை விரும்பவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த புதிய கலரிங் அம்சம் வாட்ஸ் அப் செயலியை பார்க்க ஆவலை தூண்டும் வகையில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

SHARE