பொதுவாக நாம் அன்றாடம் பார்க்கும் பூக்கள் எவ்வாறு, எத்தனை நாட்களில் பூக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதுவும் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமா பூக்கள்…
ஆம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் தெரியுமா?… அந்த மலரின் பெயர் அன்னப்பறவை மலர். இம்மலரானது கொடைக்கானல் தமிழ்நாடு விடுதியில் பூத்துள்ளது.
10 அடி முதல் 15 அடி உயரம் வரை மலரக் கூடிய இந்த மலர் அன்னப் பறவையின் கழுத்தைப் போன்ற வடிவத்தில் காணப்படுகின்றது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வத்துடன் பார்த்துப் படம் பிடித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.