5000 மில்லியன் செலவில் மகிந்தவின் புதிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

436

 

Mahinda-Food-Shopகொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தக தொகுதி திறப்பு விழாவிற்கு 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 07ல் அமைந்திருந்த கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் முன்னைய அலுவலகத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஆகேட் இன்டர்நெஷனல் என்ற பெயரில் வர்த்தகத் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது.

இதன் மறுசீரமைப்புக்கு 5000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வர்த்தகத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்காக மட்டும் சுமார் 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால்,நாமல் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான நடனக்குழுவினர் இந்த நிகழ்வில் மேடை நடனமொன்றை அரங்கேற்றியிருந்தனர்.

இந்த ஒரு நடனத்துக்காக மட்டும் 80 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தகத் தொகுதி சாதாரண பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. அதிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளும் உயர்ந்த விலைப்பட்டியலைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்காக பெருந்தொகையான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

altaltaltalt

SHARE