சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தபடவேண்டும். தற்போது தமிழினத்தின் இருப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்காக கட்டமைக்கப்பட்ட இனவழிப்பொன்று இடம்பெற்றுவருகின்றது.
இவற்றைத் தடைசெய்வதற்கு இடைகால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்துவது அவசியமாகும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்று வழங்கப்டவேண்டும் அத்துடன் சிறீலங்காவில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருமாகும்.
இதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிடும் பட்சத்தில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவா ஊடக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்களும் யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றதற்கான நேரடிச்சாட்சியங்கள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் வைத்துப் பார்க்கையில் இறுதியுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்ருமான தருணங்களில் தமிழ் மக்கள் மீது நிகழ்ச்சிநிரலிடப்பட்ட ஒரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
ஆகவே தான் நாம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றோம். மேலும் இறுத்தியுத்திற்கு முகங்கொடுத்த எத்தனையோ நேரடிச் சாட்சியங்கள் அவ்விடயங்கள் தொடர்பில் மௌனமாக வேண்டியதொரு நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக எம் போன்ற மக்களுடன் நெருக்கமானவர்களுக்கு கூட அவர்கள் அச்சத்துடனேயே தமது நெருக்கடியான நிலைமைகளைத் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது குறைந்த பட்சம் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை.
மாறாக தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் ஆட்சி செய்வதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு, பௌத்த மதத்தை பரப்பும் செயற்காடுகள் இவற்றுக்கெல்லாம் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பு ஆகிய செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக இங்கு வருகைதந்து தமிழர்களின் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் அனைத்து தரப்பினரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். ஆகவே இவ்வாறான கட்டமைக்கப்பட்தொரு இனவழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமாகும்.
தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இப்பிரேரணை தமிழர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றமை துர்ப்பாக்கியமானதொன்றாகும்.
இப்பிரேரணையை கூர்மையாக பார்க்கையில் குறிப்பாக எந்வொரு இடத்திலும் “சர்வதேச விசாரணை” என்ற சொற்பிரயோகம் காணப்படவில்லை. தற்போது திருத்தப்பட்டுள்ள சரத்தின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் விடயங்களை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தொடரில் வாய்மொழிமூலமான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதோடு அதற்கு அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே அறிக்கையிடலை முன்வைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
60வருட காலமாக தமிர்கள் தமது உரிமைகள்மைகளை வென்றெடுப்பதற்காக போரடி வருகின்றனர். வெ;வாறான நிலையில் அப்போராட்டத்திற்கென பாரிய வரலாறுகள் காணப்படுகின்றன. உயிர்கள் உடமைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான இழப்பீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இவை தொடர்பில் ஒரு விடயம் கூட உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
60வருட கால தமிழர் போரட்டத்தின் பரிநாமம் மாற்றப்பட்டு பெரும்பான்மை மதத்தினரால் சிறுபான்மை மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம், மற்றும் இந்து மதங்கள் தாக்கப்படுவதாக மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுபான்மை மதங்கள் தாக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. இருப்பினும் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதே மிக முக்கியமானதாக இருக்கின்றது.
இலங்கையில் காணப்பட்ட இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளின் வரலாற்றினை அறியாதவொரு நபர் இப்பிரேரணையை தற்போது வாசிக்கும் நிலைமையேற்பட்டால் அவரால் தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான எந்தவிதமான வார்த்தைப்பிரயோகங்களும் இடம்பெற்றிருக்கதிருக்கின்றது. இந்தப் பிரேரணையில் எங்குமே “தமிழ்” என்றொரு சொற்பதமே காணப்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.
எம்மைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆட்சியாளர்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்பில் எமக்கு கடுமையான விமர்சனம் இருக்கின்றது. அதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. ஆனால் இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இனங்களுக்கிடையலான பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற தொனியை வெளிப்படுத்துகின்றதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. ஆகவே நாம் இப்பிரேரணைய ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக பேராடிக்கொண்டிருக்கின்றோம். எமது உரிமைகளை பெற்று தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்படவேண்டும்.
இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வாக சுயநிர்ணய உரிமைளை அங்கீகரித்த தீர்தெவான்று வழங்கப்படவேண்டும். இதனை சர்வதேச சமூகத்தினரும் குறிப்பாக பிரேரணையை முன்வைத்திருக்கும் அமெரிக்க தரப்பினர் கருத்திற்கொண்டு தற்போது ஐக்கிய நாடுகளில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் இவ்விடயங்களையும் உள்வாங்குவதற்கு ஆவண செய்யவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகவிருக்கின்றது.
– See more at: http://www.tamilkathir.com/news/14559/58//d,full_article.aspx#sthash.bRNISuVh.dpuf