உங்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் குறித்து உங்க ராசி என்ன கூறுகிறது என்று தெரியுமா?

349

ஒவ்வொருவரின் ஆழ்மனதின் எண்ணங்களும் அவர்களது குணாதிசயங்களை பொறுத்து தான் இருக்கும். நமது சூழ்நிலை, வாழ்வியல் முறை, தொழில், உறவுகள் போன்றவைகள் இதில் தாக்கங்கள் ஏற்படுத்தும்.

ஆனால், பொதுவாகவே சில இராசி உள்ளவர்களது ஆழ்மனது எண்ணங்கள் இப்படி தான் இருக்கும் என்று சில குறிப்புக்கள் கூறுவது உண்டு. அந்த வகையில், இராசிக்கு ஏற்ப உங்கள் ஆழ்மனது எண்ணங்கள் எப்படி இருக்கும் (அ) எதுப் போன்ற குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்று தான் நாம் இனி இங்கு காணவிருக்கிறோம்….

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள், அவர்களது உலகத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். வலிமையான அணுகுமுறை கொண்ட இவர்கள், விரும்புவது எவ்வளவு தொலைவில் இருப்பினும் கூட அதை சென்று அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்படுவார்கள். கொஞ்சம் திமிர், தலைமை பொறுப்பு போன்றவை இவர்களிடம் இருக்கும். மேலும், மற்றவர் பேசுவதை உன்னித்து கேட்கும் பழக்கம் இவர்களிடம் இருக்கும்.

ரிஷபம்

பிடிவாத குணம் இருப்பினும் கூட இவர்களது சுயமான வழியில் தான் செயல்படுவார்கள். இவர்கள் வாய்மை மற்றும் உண்மையை மிகவும் முக்கியமானவை என கருதுவார்கள். அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்.

மிதுனம்

அந்நியன் போல ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி உள்ளவர்கள் இவர்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். இவர்களது எண்ணங்களை புரிந்துக் கொள்வது சற்று கடினம் தான். கவர்ந்திழுக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். நல்லநேரம் வரும்வரை காத்திருப்போம் என்று இருப்பவர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மென்மையானவற்றை விட, சற்று கடினமாக இருப்பதை தான் விரும்புவார்கள். நண்டு ஓடு போல எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர்கள் இவர்கள். காதலர்களின் பேச்சை கேட்பவர்கள், கருணையாக இருப்பவர்கள். எதையும் அதிகமாக மறைக்க மாட்டார்கள்.

சிம்மம்

அதிகமாக எதையும் தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அனைவரின் பார்வையும் தன்மீது இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். மிகவும் துடுக்காக நடந்துக் கொள்வார்கள். அவர்களை பற்றி அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

கன்னி

எதையும் தர்க்கமான முறையில் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். பெரிய, பெரிய பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வுக் காண வேண்டும் என்று முனைபவர்கள். பச்சாதாபம் பார்ப்பது இவர்களுக்கு பிடிக்காது.

துலாம்

காதல் மற்றும் தொழில் இரண்டையும் சரியான சமநிலையில் வைத்துப் பார்க்கக் கூடியவர்கள் இவர்கள். மனதை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் இவர்களிடம் இருக்கிறது. அவர்களது மகிழ்ச்சியை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். அது தொடர்ந்து அவர்களை பின் தொடரும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் அணுகுமுறையை கண்டு அஞ்சுபவர்கள் உண்டு. இவர்கள் சற்று மர்மமானவர்கள், நீண்ட நேரம் பேசியும், பழகியும் கூட இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களை முழுவதுமாக புரிந்துக் கொள்வது கடினமான காரியம். தங்களது குணாதிசயங்களை நொடிகளில் மாற்றிக் கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும்.

தனுசு

இவர்கள் அக்கினியை போன்றவர்கள். வியக்கவைக்கும் அளவு வலிமையாக இருப்பார்கள். துணிந்து செயல்படுவதை இவர்கள் அதிகம் விரும்புவர்கள். இவர்களை சுற்றி இருக்கும் நபர்களையும் இவர்களது எண்ணங்களோடு ஒத்துப்போக செய்துவிடுவார்கள்.

மகரம்

இவர்கள் வலிமையாக உழைக்கக் கூடியவர்கள். என்ன செய்தாலும் கூட வேலையை முடித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு இவர்களிடம் இருக்கும்.

கும்பம்

உணர்வு ரீதியாகவும் கூட தர்க்கமான முறையில் தான் தீர்வுக் காண விரும்புவார்கள். இது தான் இவர்களுக்கு தன்னிறைவை அளிக்கும். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். புதிய கலாச்சாரம், சிந்தனைகள் கற்றுக் கொள்ள விரும்புவர்கள். திறந்த உலகில் பலவன முயற்சிக்க முனைவார்கள்.

மீனம்

தங்களை பற்றி அறிந்துக் கொள்வதிலேயே இவர்களுக்கு சற்று குழப்பம் இருக்கும்.பச்சோந்தி போல இவர்களது மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆழமாக அக்கறையும், உணர்ச்சிப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்கள்.

 

SHARE