உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சுப்பர் கம்பியூட்டர்களில் சீனாவின் Tianhe-2 கணனியே தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகின்றது. சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தில் காணப்படும் இக்கணினி 33.86 petaflops/s எனும் வேகத்தில் செயலாற்றக்கூடியதாக இருக்கின்றது. முதன்மையான 500 சுப்பர் கம்பியூட்டர்கள் தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் 63 தொடக்கம் 76 வரையான கணினிகள் சீனாவிலும், பிரித்தானியாவில் 30 கணினிகளும், பிரான்ஸில் 27, ஜேர்மனியில் 23, ஜப்பானில் 30 கணினிகளும் காணப்படுகின்றன. |