அதிரடி ஆட்டம்-ஐந்தாம் தலைமுறை படத்தில் நந்திதா.

469
ஐந்தாம் தலைமுறை படத்தில்அதிரடி ஆட்டம் போட்ட நந்திதா.

தயக்கத்தால் தவறவிட்ட வாய்ப்பு பின்னர் தேடி வந்தது என்றார் இயக்குனர்.பரத், நந்திதா நடிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எல்.ஜி.ரவிசந்தர் டைரக்டு செய்கிறார்.

அவர் கூறியதாவது:உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு இயக்குனர் கே.பாலசந்தர் அலுவலகத்துக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.

அங்கு சென்றதும் நமக்கெல்லாம் இவரிடம் வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் எழும். அந்த தயக்கம் என்னை அவர் அலுவலக கதவை தட்டாமலே திரும்பச் செய்து விடும். பலமுறை இதுபோல் நடந்திருக்கிறது.

ஆனால் வேறு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். மாசாணி என்ற படத்தை இயக்கினேன்.

எந்த அலுவலகத்தின் கதவை தட்டத் தயங்கி திரும்பினேனோ அதே அலுவலகத்திலிருந்து எனது 2வது படம் இயக்க இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சித்தவைத்திய பின்னணியில் இதுவரை இவ்வளவு ஆழமாக யாரும் கதை சொன்னதில்லை. இது பரத் நடிக்கும் 25வது படம். இதுவரை அடக்கமாக நடித்திருக்கும் நந்திதா இப்படத்தில் நகைச்சுவையுடன் அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறார்.

 

SHARE