ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமை திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக அங்கிருந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பலியானார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த பிணங்களை கழிவறையில் வைத்து அடைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாக்தாத் பொலிஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த 25 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணங்களை அடைத்து வைத்திருந்த கழிவறை முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது என்றும் இந்த காட்சியை பார்ப்பதற்கே படுபயங்கரமாக இருந்ததாக ஈராக் பொலிசார் தெரிவித்துள்ளனர். |