சம்பந்தனுக்கு முன்னாள் போராளிகள் இறுதி எச்சரிக்கை(காணொளி)

495

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேடம்

செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு  பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி என்ற என்னை நீங்கள் தூக்கிட்டு போகலாம் அனால் எனக்கு பின்னால் 8000 ஆயிரம் போராளிகள் உள்ளார்கள் அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்.
சாதாரணமாக ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையே தீர்மானிக்கமுடியாத நிலையில்தார் இருக்கின்றீர்கள் ஓமந்தை என்றபோது தாண்டிக்குளம்மென்று பின்னர் மாங்குளமாக வந்திருக்கிறது. இதுபோல முன்னாள் போராளிகளை சோதனை செய்வதற்கு அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் அனுமதி பெற்றபோது அதன்பிறகு யாரோ தலையிட்டு அதனை தடுத்துவிட்டார்கள் இதற்குள் கன குளப்பங்களை நாம் காண்கின்றோம்.
எம்மை பரிசோதித்து முழுமையான ஒரு அறிக்கையை பெற்றாலேயே முன்னாள் போராளிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம். சாதாரணமாக ஒரு முன்னாள் போராளியை திருமணம் செய்வதற்குகூட சமூகத்திலுள்ளவர்கள் அஞ்சுமளவிற்கு நஞ்சு ஊசி விவகாரம் உள்ளது. என மிக முக்கியமான விடயங்களை பிரித்தானிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

SHARE