8 வருஷம் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல.. விளக்கம் அளித்த சாந்தனு

57

 

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் சாந்தனு.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் சாந்தனு மற்றும் கீர்த்திக்கும் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை.

பேட்டி..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாந்தனு மற்றும் கீர்த்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாததால் தாங்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், “நாங்கள் திருமணத்திற்கு சென்றாலே குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் இப்போது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம்”.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் குழந்தையை பெத்துக்க கூடாது என்று முடிவு எடுக்கவில்லை. எது வர வேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும்” என்று கூறியுள்ளனர்.

SHARE