பூமியை சுற்றி வரும் நிலவு 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பொலிவு அடைவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நிலவின் மேற்பரப்பில் 180 குழிகள் உருவாகிறது.
விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும் இந்த குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கின்றன.
81, 000 ஒருமுறை நிலவு புதுப்பொலிவடைகிறது, இந்த பொலிவு இதற்கு முன்பு இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை கொண்டு நிலவின் வயதையும், மற்ற நட்சத்திரங்களின் வயதையும் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.