440

மீண்டும் எழுத ஆரம்பித்துள்ள பென்சில்!

மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பென்சில் என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். மணிநாகராஜ் என்ற புதிய இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப் புகழ் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.
கடந்த வருடம் துவங்கப்பட்ட பென்சில் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் பென்சில் பட பணிகளில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. மதயானைக்கூட்டம் படத்தின் தோல்வி காரணமாக பென்சில் படத்துக்கு விநியோகஸ்தர்கள் பிரச்சனையை ஏற்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே பென்சில் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அந்தப்படம் இனி வெளிவராது என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் பென்சில் படத்தைப் பற்றி வெளியான செய்திகள் தவறானவை என்று சொல்வதுபோல் அப்படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி, சென்னையில் துவங்கவிருக்கிறது. பென்சில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்த உடனே, போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளை முடித்து, இந்த வருடத்துக்குள் படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளனர். பென்சில் படத்தை முடிக்க வேண்டும் என்ற வெறியில் இசைப்பணியை சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.
SHARE