கவுட்ண்டர்களின் மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் காமெடி கிங் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவை என்றும் நம்மால் மறக்கவே முடியாது. குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் நகைச்சுவைகள் பட்டையை கிளப்பும்.
84 வயதாகும் நடிகர் கவுண்டமணி தற்போதும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக யோகி பாபுவுடன் கூட்டணி அமைந்துள்ள கவுண்டமணி ‘ஒத்த நோட்டு முத்தையா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் கூட கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், திரையுலகில் 84 வயதாகியும் நடித்து வரும் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காமெடி கிங் கவுண்டமணிக்கு சென்னையில் பல வீடுகள் இருக்கிறதாம். அதே போல் சொந்த ஊரில் பல நிலங்களும், வீடுகளும் இருக்கிறது என தகவல் கூறுகின்றன. மேலும் இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 முதல் ரூ. 70 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.