இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்வாக இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களது கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர். இதேபோன்று நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவும், மாலை 4 மணிக்கு இளைஞரணி மாநாடும் நடைபெறவுள்ளன. நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கட்சியின் பேராளர் மாநாடும், பிற்பகல் 2 மணிக்கு கட்சியின் தேசிய மாநாடும் நடைபெறவுள்ளன. –