வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் (11.01.2017) மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கோசம் எழுப்பியவர்கள் சம்பந்தன் தீர்வுக் குழந்தையைப்பெற கஸ்டப்படுகிறார், டாக்குத்தர் நீ போய் வைத்தியம் பார், தேர்தல் டிக்கட்டுக்காக சம்பந்தனின் மலம் தின்னும் பன்னிகள் இங்கு வாய் திறக்கக்கூடாது,
செத்த பிணங்கள் எங்களைப் பார்த்து விசமிகள் என்று கூறுவதா?, சம்பந்தனுக்கு அடி கழுவி பிழைப்பு நடத்தும் நீ எங்களை விமர்சிப்பதா?, சம்பந்தனுக்கு விசுவாசம் காட்டுவதற்காக சுத்தியலிங்கம் நீ எங்களை விமர்சிப்பதா?, சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் போட முடியாத ஆண்மை கெட்ட வவுனியா தமிழரசுக்கட்சிக்காரரே மக்களிடம் வாய்ச்சொல் வீரர் நீங்களே, உங்கள் சாக்கடை அரசியலால் இன்று நாங்கள் வீதியில் நிற்கிறோம், புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் சுத்திய அமைச்சரிடம் ஜாக்கிரதை, வடக்கு மாகாணத்தின் ஊழல் பெருச்சாலி சுத்திய அமைச்சரே நீதி விசாரணைக்கு தயாரா?, ஊழல் விசாரணை கமிட்டியில் ஆஜர் ஆகி முதலில் உன்னை யோக்கியன் என்று நிரூபி. என்று கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி தமது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
விசமிகள் என்று கௌரவ அமைச்சர் சத்தியலிங்கம் குறிப்பிட்டது பதாதைகளை ஏந்தி அல்லது சம்பந்தனின் உருவப்பொம்மையை எரித்தவர்களை அல்ல. விசமிகள் ஆயுதக்கட்சிகளிலிருக்கக்கூடியவர்கள். இருக்கக்கூடியவர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவர்களும் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சிகளாக இருக்கிறார்கள். சம்பந்தனின் மலத்தைத் திண்பவன் நான் மட்டுமல்ல. அவ்வாறாகவிருந்தால் த.தே.கூட்டமைப்பில் இருந்த அனைவரும் தான் என்பதை இவ்வார்ப்பாட்டக்காரர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
தீர்வுத்திட்டத்திற்கும், காhணமற்போனவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதை கடந்தகால அரசிற்கு எதிராகவே மேற்கொண்டிருக்கவேண்டும். கடந்தகால அரசில் தமிழ் மக்கள் காணாமற்போனதற்கு புளொட், ஈ.பி.டி.பி இன்னும் பல தமிழ் அரசியல் கட்சிகளும் தான் இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றார்கள் என்பதை இவ்வார்ப்பாட்டக்காரர்கள் புரிந்துகொள்ளவேண்டும். முழுமையான வரலாற்றினை இவர்கள் அறிந்திருந்தால் இந்த ஆர்ப்பாட்டத்தில் அல்லது அரசியலுக்கு சேறு பூசும் வகையில் கீழ்த்தரமான கோசங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.
த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அண்மைக்காலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். ஊழல்வாதிகள் எனக்குறிப்பிடப்படுகின்றனர். இது தமிழினத்தின் தலையில் தானே மண்ணை வாரிப்போடும் ஒரு செயல். சிங்கள அரசுக்கெதிராகவும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் எமது எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரப்படவேண்டும். 30 ஆண்டுகள் யுத்தம் நிறைவடைந்து தற்போது ஒரு ஜனநாயக வழியில் எமது அரசியல் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதனைக் குழப்பும் நோக்கில் பல அரசியல் கட்சிகள் அரசினால் ஏவிவிடப்பட்டுள்ளது. காணாமற்போனோர், விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பிலும் பணிகள் மக்களுக்காக தொடர்கின்றது. இதனை ஆர்ப்பாட்டத்திற்கு ஏவிவிட்ட விசமிகள் உணரவேண்டும். தான் விசமிகள் என்ற சொற்பிரயோகத்தை பாவிக்கவில்லை இது சோடிக்கப்பட்ட விடையம் என்று நான் நாடு திரும்பியதும் இதுபற்றி ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் குறுந்தகவல் ஊடாக அமைச்சர் சத்தியலிங்கம் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது
அரசியல் தீர்வுத்திட்டத்திற்கு இந்த அரசும் முட்டுக்கட்டைப் போடுகின்றது. ஆர்ப்பாட்டத்தைத் தூண்டிவிடும் இவர்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காதது ஏன்? ஆர்ப்பாட்டம் செய்த மக்களை நான் விசமிகள் எனக்குறிப்பிட்டால் அது தவறு. எமது நாட்டிற்காக உயர்த்தியாகம் செய்த வீரர்களின் முதுகில் ஏறி சவாரி செய்யும் எண்ணம் எனக்கில்லை. நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொண்ட பின்னர் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு போன்ற பொறுப்புக்களை எமது அமைச்சுப் பதவிக் காலத்தில் செய்துகொண்டிருக்கிறேன்.
மக்களுக்காக நான் எவ்வளவோ அபிவிருத்திகளை பாரபட்சம் பாராது செய்துவருகின்றேன். எமது அமைச்சினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளையும் இவ்வார்ப்பாட்டத்தை தூண்டிவிட்ட விசமிகள் அறிந்துகொள்ளவேண்டும்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் இதுவரை மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்
வைத்திசாலைகளை தரமுயர்த்தல்
மாகாணத்திற்கான ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பு
புதிய வைத்தியசாலைகள் திறப்பு
புதிய வைத்திய சிகிச்சை பிரிவுகள் உருவாக்கம்
01. 16 வெளிநோயளர் பிரிவுகள்
02. 07 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள்
03. 05 சுகாதார வைத்திய அதிகாரி விடுதி
04. 01 மலேரியா தடுப்பு பிரிவு
05. 01 காசநோய் வைத்திய சிகிச்சை நிலையம்
06. 03 சிறுநீரக நோய் சிகிச்சை நிலையங்கள்
07. 03 சத்திரசிகிச்சை விடுதிகள்
900 சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம்
02 அவசர விபத்து சேவை பிரிவு வவுனியா மற்றும் சாவகச்சேரியில்
100 அவசர அழைப்புக்கான அம்புலன்ஸ்
சேவை
2013 – 2016 வரையான முக்கியமான சில
வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் திணைக்களத்துடன் தொண்டர் அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய 900 பேர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
எமது அமைச்சினால் 600ற்கும் மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான மலசலகூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு சித்திரை 2015ல் இருந்து எமது அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்-கிளிநொச்சி
நெடுந்தீவு மக்களுக்கான அதிவேக அம்புலன்ஸ் படகு சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கீரிமலையில் ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை இரத்தவங்கி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தொண்டராக கடமையாற்றியவர்களுக்கான நிரந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அனலைதீவில் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் யாழில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியா வைத்தியசாலையில் 200 கட்டில்களைக்கொண்ட நோயாளர் விடுதிக்கான கட்டடத்தை இந்திய அரசின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பூவரசங்குளம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சாளம்பைக்குளத்தில் தாய்சேய் பராமரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நவ்வி வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கண்ணாட்டி கணேசபுரத்தில் கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கலாபோகஸ்வௌயில் கிராமிய வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-முல்லைத்தீவு
மல்லாவி வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
உயிலங்குளம் வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பண்டாரவெளியில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார திணைக்களத்திற்கு வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோயாளர் விடுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நறுவிலிக்குளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லை வள்ளிபுனத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
எருக்கலம்பிட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
MOTIVATION LANKA நிறுவனத்தின் மூலம் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் கழகங்களுக்கு அரைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு யாழில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான மலசலகூடம் அமைப்பதற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ் உதவித்திட்டம் வடக்கு மாகாணம் முழுவதிற்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புதுக்குளம் பாடசாலைக்கு போட்டோகொப்பி இயந்திரத்திற்கான பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
யானை நடமாட்டம் உள்ள கண்ணாட்டி கணேசபுரம் பிரதேசத்திற்கான வீதி விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் பாடசாலைக்கு ஒலிபெருக்கித் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மற்றும் துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவில்குஞ்சுக்குளம் பாடசாலையின் ஆசிரியர் தங்கும் விடுதி புனர்நிர்மானம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா கொந்தக்காரன்குளம் கிராமத்தின் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இணையும் கரங்கள் விசேட தேவையுடையோர் அமைப்பிற்கு நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆலயங்களின் வளர்ச்சிக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழினத்தின் விடுதலைக்காக நாம் ஏகோபித்துக் குரல் எழுப்பவேண்டும். அதுவே எமது தேசியம், சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்த ஊன்று சக்தியாக அமையும். இதனைவிடுத்து தமிழ்க்கட்சிகளுக்கிடையிலும், தமிழ் மக்களுக்கிடையிலும் பிரிவினைகளை ஏற்படுத்துபவர்களை இனங்கண்டு அவர்களை அப்புறப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கும். ஐ.நாவில் எமது விடயங்களை கட்சி பேதங்களை மறந்து எடுத்துக்கூறவேண்டும். இதனைவிடுத்து வங்குரோத்து அரசியல் செய்பவர்கள் தேசியம், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கத் தகுதியற்றவர்களாவார்கள்.