கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன் இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.