வடமாகாணசபை அமைச்சர்கள் அபிவிருத்தியில் மோசடி செய்வதாக எழுந்துள்ள புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை

674

 

tna.mini5_

உத்தியோகபூர்வமற்ற, அரசாங்கத்திற்கு சார்பான, இயக்கக்கட்சிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் போன்றன இம் அமைச்சர்களுக்கெதிராக போலியான பரப்புரைகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம்

SAMSUNG CAMERA PICTURES

அவர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடன் இணைந்து ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும், அவரை பக்கபலமாக வைத்துக்கொண்டாலே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. அமைச்சர் டெனிஸ்வரன், அமைச்சர் குருகுலராஜா, அமைச்சர்.ப.சத்தியலிங்கம், அமைச்சர்.ஐங்கரநேசன் இவர்கள் நால்வரும் சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளையும், அவர்களுக்குத் தேவையான அன்றாட வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிலிருந்து தவறிவிடுகிறார்கள். அவற்றை சரிசெய்துகொண்டால் நலமாக இருக்கும் என்பது தமிழ்த்தேசியத்திற்கு சார்பான ஊடகங்களின் கருத்தாகும்.

10(25)  unnamed-1412

வடமாகாணசபையின் பதவிகளில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் தனிச்சிறப்புக் கொண்டவர்கள். ஆகவே இவர்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பல தீயசக்திகள் ஏவி விடப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்பொழுது இவ்வமைச்சர்கள் உளரீதியான தாக்கத்திற்குள்ளாகும் நிலையேற்படலாம். இதனை வலுவாகக்கொண்டே இலங்கையரசும் செயற்படுகிறது. ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விட வடமாகாணசபைக்கும், இவ்வமைச்சர்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பின் வழியாக வந்த இவ்வமைச்சர்கள் தலைக்கணம் காட்டுவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசின் நோக்கம் முதலமைச்சரையும், இவ்வமைச்சர்களையும்; வைத்து இணக்கப்பாட்டு அரசியலை செயற்படுத்துவதே.
தற்பொழுது வடமாகாணசபையின் அமைச்சர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசுடன் இணைந்து செயற்படுவதுபோல இவர்களும் இணைந்து செயற்படுமளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

North

 

அதற்காகவே தெரிவுக்குழு என்ற ஒன்றை அரசு முன்னெடுத்துள்ளது. இதனூடாக பல திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதில் அரசாங்கம் சார்ந்தவர்கள் கூட்டாக இணைந்து முடிவெடுப்பதன் ஊடாக ஒருமைப்பாட்டுக்கு வந்து தீர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இணக்கப்பாட்டு அரசியலைச் செய்வதாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையரசுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டு சுகபோகவாழ்வு வாழ்ந்திருக்கமுடியும். முதலமைச்சர் பதவி தருவதாக இலங்கை – இந்தியரசுகள் கூறியபோதிலும் அந்தப் பதவி எனக்குத் தேவையில்லை. இதனூடாக தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டங்களை பெற்றுக்கொளள் முடியாது என தெரிவித்திருந்தார் என்பதை இவ்வமைச்சர்களும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ளவர்களும் உணரவேண்டும்.

daklach

பிரபாகரனின் பேச்சுக்கு அடங்கிப்போகாத டக்ளஸ் தேவானந்தா தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ அல்லது வடமாகாண அமைச்சோ வழங்குகின்ற அதிகாரங்களுக்கு தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியின் கீழ் செயற்படுவோம் என்று கூறுவதற்கு டக்ளஸ் அவர்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வடமாகாணசபையின் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் செயற்பாடுகளையும் இலங்கையரசு மட்டுப்படுத்தியே செயற்படுத்திவருகின்றது. தமிழ் இணையத்தளங்கள் தமிழ்த்தேசியப் பற்றுள்ள தமிழ் அமைச்சர்களை விமர்சிப்பது அரசாங்கத்திற்கு வலுச்சேர்க்குமே தவிர தமிழினம் தலைநிமிர்ந்து வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதுதான் உண்மை.

TPN NEWS

SHARE