சீனாவில் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினர் கண்முன்னே நபர் ஒருவரை புலிகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காயின் தென்பகுதியில் நிங்போ என்னும் உயிரியல் பூங்கா உள்ளது. பூங்கா பார்வையிடுவதற்காக நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குறித்த நபரை புலிகள் இழுத்துச் சென்றுள்ளது.
இதனை பார்த்த பார்வையாளர்கள் அலாரத்தை அடித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் புலிகளை விரட்டி அடித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
எனினும் புலிகள் மிக கொடூரமாக தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் கண்முன்னே நடந்த இந்த கொடூர சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/6DhrVzWx7Pg