ஊவா மாகாணசபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் இணைப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
வாக்குசாவடிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே அவரை தென்மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர்.
ஏற்கனவே பண்டாரவளை மேயரும் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பண்டாரவளையில் இடம்பெற்ற வாகன தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஊவா மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்று நலன் விசாரித்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
TPN NWS