ஊவா தேர்தல் களத்தில் குண்டர் படையுடன் அம்பாந்தோட்டை எராஜ்

521
அம்பந்தோட்டை நகர முதல்வரும், ஆளும்கட்சி ஆதரவாளருமான எராஜ் ரவீந்திர இன்றைய ஊவா தேர்தல் களத்தில் 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிரம்ப தனது குண்டர் படையுடன் காத்திருந்ததாகவும், ஏதோவொரு தேர்தல் மோசடியில் ஈடுபடவே அவர் அங்கு வந்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொனராகலை, ஒக்கம்பிடிய வாக்குச்சாவடி அருகில் LE 7447 ஆம் இலக்க பொலேரோ ரக வாகனத்தில் இவர் காலையில் இருந்து காத்திருந்ததாகவும், 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறைந்திருந்தமை ஒரு பீதியான சூழலை அங்கு தோற்றுவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு அடி! பொதுமக்கள் வீராவேசம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் பதுளை தர்மபால வித்தியாலய வாக்குச்சாவடிக்கு வந்த அருந்திக பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்தி வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்குத் துணையாக நாமல் ராஜபக்ஷவின் நில் பலகாய குண்டர்களும் அங்கு நின்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஐ.தே.க. முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள் அவர் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்துள்ள அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருந்திக மீதான தாக்குதலைக் கண்டவுடன் நில் பலகாய குண்டர்கள் அப்பகுதியிலிருந்து ஓடித்தப்பியுள்ளனர். இதன் காரணமாக காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் கூட ஆளுங்கட்சியினர் யாரும் அப்பகுதியில் இருக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

இதற்கிடையே பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடக்கும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உதித்த லொக்குபண்டாரவின் ஆதரவாளர்கள் ஜே.வி.பி பிரதிநிதியை தாக்கினர் – சமந்த வித்தியாரத்ன

அப்புத்தளை யஹாலபெத்த வாக்குச் சாவடியில் ஜே.வி.பியின் பிரதிநிதியை நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்குபண்டாரவின் ஆதரவாளர்கள் தாக்கியதாக ஜே.வி.பியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

உதித்த லொக்குபண்டாரவின் தாய் இன்று வாக்களிக்க சென்றிந்த போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை.

இது குறித்து ஜே.வி.பியின் பிரதிநிதி அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வாக்களித்து முடிந்த பின்னர், தமது பிரதிநி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் வித்தியாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஜே.வி.பி பிரதிநி தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் காயமடைந்த சிலரை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

பண்­டா­ர­வளை நகரில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிர­சா­ரத்தின் போது வாகன விபத்தில் காயமடைந்து பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிலரை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

TPN NEW

 

SHARE