ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில் இந்த இணையத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்த இணையத்தின் முகவரி: http://unga.president.gov.lk