தொழில் அதிபரை மணக்கிறார் அனுஷ்கா 

412




திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டிருக்கிறார் அனுஷ்கா.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ரஜினி ஜோடியாக ‘லிங்கா, அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிப்பதுடன் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ‘பாஹுபாலி‘, குணசேகர் இயக்கத்தில் ‘ருத்ரம்மாதேவி‘ படங்களில் நடிக்கிறார். இதில் ‘ருத்ரம்மாதேவி‘ ஷூட்டிங் முடிந்தது. ‘லிங்கா‘ ஷூட்டிங் இந்த மாதம் முடிகிறது. இப்படங்களையடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.

சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்த ஒரு இயக்குனர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஸ்கிரிப்ட் சொன்னார். அதை முழுவதுமாக கேட்ட அனுஷ்காவுக்கு பிடித்துவிட்டது. ஆனாலும் நடிக்க மறுத்துவிட்டாராம். கால்ஷீட் பிரச்னை எதுவும் இல்லை. ‘பாஹுபாலி‘ முடிந்தபிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ராஜமவுலி கொடுத்த வாக்குப்படி அவர் இயக்கும் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு திருமணத்துக்கு தயாராகிறார் அனுஷ்கா. அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போடுகிறார். அனுஷ்காவின் வருங்கால கணவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. தொழில் அதிபரை மணக்க உள்ளார்

 

SHARE