பான்பசிபிக் ஓபன்: இவானோவிச் சாம்பியன்

434

டோக்கியோ : பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் அனா இவானோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியுடன் (டென்மார்க்) நேற்று மோதிய இவானோவிச் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் வோஸ்னியாக்கி கடும் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.ஒரு மணி, 39 நிமிடம் நடந்த இப்போட்டியில் இவானோவிச் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சீசனில் தனது 4வது டபுள்யு.டி.ஏ பட்டத்தை வென்றுள்ள அவர், ஒற்றையர் பிரிவில் பெறும் 15வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE