யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமக்கான தீர்வுகளைப்பெறும் நோக்கில் தமிழ் மக்களால் அடை யாள உண்ணாவிரதங்கள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டங்கள் பலவற்றை இந்நாட்டில் அதுவும் வடகிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாட்டில் நல்லாட்சி, சமாதானம் நிலவிவருவதாக கூறிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மக்கள் போராடத் துணிந்திருப்பதை நாம் மிக உண்ணிப்பாக அவதானிக்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்று பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விட யமாக தங்களது காணிகள் விடு விக்கப்படவேண்டுமென்று கேப் பாப்புலவு, புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவருகின்றனர். வடகிழக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணி களில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. எங்கெங்கு காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன என்கின்ற விடயங்களைப் பார்ப்பதற்கு முன்னர் இலங்கையானது 65610 சதுர கிலோ மீற்றரினை நிலப்பரப்பாகக் கொண்டிருக்கின்றது. அதிலும் வடகிழக்கின் நிலப்பகுதி என்பது மிக வும் குறுகியதே எனலாம்.
இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் போன்ற மாவட்டங்களில் இராணுவத்தின் நில சுவீகரிப்பு என்பதை நாட்டின் தேசிய பாது காப்பிற்காகத்தான் எனக் காரணங் காட்டுகிறார்கள். ஆனால் தற் போது யுத்தம் நிறைவடைந்து 07வருடங்களைக் கடந்துள்ளது. உண்மையில் இவர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கான பாதுகாப்பினை பலப்படுத்தவேண்டியவர்களாகவும் அதுமட்டுமல்லாது இந்நாட்டில் ஊடுருவியுள்ள சீன, இந்திய, அமெரிக்க புலனாய்வுகளையும் இந்நாட்டில் இருந்து அப்புறப் படுத்தவேண்டும். இவற்றைச் செய்யாது வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம்களை அமைத்திருப்பது நியா யமான விடயமல்ல.
வடபகுதியை எடுத்துக்கொண்டால் யுத்த காலத்தின் பின்னர் தமிழ் மக்களது காணிகளை அபகரித்து பாதுகாப்பு உயர் வலயங்கள் எனக்கூறிக்கொண்டு அதற்குள் அவர்களது செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
அக்கறைப்பற்று, பொத்துவில், கல்லடி, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, திருகோண மலையின் சம்பூர் போன்ற இடங்களில் இவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமது தேவை களுக்காக மக்களது காணி களைப் பிடித்துவைத்துள்ளார்கள். அண்ணளவாக வட-கிழக்கில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் முகாம்களை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைவிட மறைமுகமாக காடுகளில் முகாம்களை அமைத்துள்ளதுடன் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பிரதேசங்களிலும் இவர்களது ஆதிக்கம் காணப்படுகின்றது.
ரெஜிமேன்ட், காலாற் படை யணிகள் என முகாம்களை அமைத்துக்கொண்டு மக்களது வாழ்க்கைக்கு தீங்கினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி, மன்னார், வவுனியா என அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குடியிருப்புக்களை அண்டியதாக பாரிய இராணுவ முகாம்களை அமைத்துக்கொண்டு ள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்த் தரப்பினர் கதைப்பதற்கு முன்வருவதில்லை. காரணம் என்னவெனில் ஒரு காலத்தில் ஆயுதக்குழுக்கள் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள். அப்போது உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம கொடுத்தவர்களும் அரச தரப்பினர்தான். யுத்த காலப்பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்குகள் வெடித்த இராணுவ முகாம்களில் அதுவும் மக்கள் குடியிருப்பினை அண்டிய பிரதேசங்களில் வெடித்துச்சிதறிய சம்பவங்களும் இருக்கின்றன.
கேப்பாப்புலவில் அமைக்கப் பட்டிருக்கின்ற வான்படைத் தளத்தில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான வான்படைக்குரிய ஓடுபாதை இருக்கிறது. அதனை தற்போது இவர்கள் புனர்நிர்மானம் செய்திருக்கிறார்கள். அதனை அண்டிய பல நிலப்பரப்புக்களை அத்துமீறி இவர்கள் கையகப் படுத்தியுள்ளார்கள். நாட்டின் தேசிய பாதுகாப்பினை நீங்கள் பலப்படுத்தவேண்டுமெனில் நாட்டில் ஊடுருவியுள்ள புலனாய்வாளர்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இதுவே இன்றைய குழப்பகரமான அரசியலுக்கும் காரண மாக அமைந்துள்ளது. கிழக்கிலும் இந்நிலையே காணப்படுகின்றது. சில இடங்களில் இராணுவத்தினரால் மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் மக்களுக்குரிய வாழ்வாதார உதவிகள் போதியளவில் அர சால் வழங்கப்படவில்லை என்பதாலேயே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
காணி விடுவிப்பு தொடர்பாக 125க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. யாழில் சில இராணுவ முகாம்களை தாமாக விட்டு வெளி யேறினர். சிலவற்றில் இன்னமும் தங்கியும் இருக்கின்றனர். சில காணிகளை இராணுவத்தினர் விடுவித்திருக்கின்றனர். ஆனால் அவ்விடங்கள் பயனற்ற இடங்களாகவே காணப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாயத்திற்குரிய காணி களை இராணுவத்தினர் கையகப் படுத்தியிருப்பதோடு அதில் இராணுவத்தினர் விவசாயம் செய் வதையும் காணமுடிகின்றது.
அதாவது ஆரம்பத்தில் பலாலி விமான ஓடுபாதை 6கிலோமீற்றரில் தான் இருந்தது. ஆனால் தற்போது அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடக்கும் போது யாழில் கிட்டு அவர்கள் தலைமைதாங்கியதோடு பலர் இதில் பங்குபற்றியிருந்தனர். நான் அப்போது பாடசாலை மாண வனாக இருந்த காலம். அப்போது கிட்டு மாமா வருகிறார் என்றும் அவர் வந்தால் நிலத்தை மீட்காமல் போகமாட்டார் என்றும் கூறுவர். தெல்லிப்பளை, ஆணைக்கோட்டை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததுடன் சொந்த நிலம் போல அங்கு விகாரைகளை அமைத்ததும் குறிப்பிடத்தக்கது. கரையோரங்களில் இராணுவம் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விடு விக்கப்பட்டது.
வடமராட்சியைப் பொறுத்தவரை செம்பியன்பற்று போன்ற இடங்கள் கிளாலி போன்ற மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இராணுவத்தினர் இருந்ததுடன் பின்னர் அவை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டது. திருகோணமலையில் வளைத்து வளைத்து இராணுவத்தினர் முகாம்களை அமைத்து இருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் இராணுவத்தினர் நிலங்களை கையகப்படுத்தியிருந்த காணிகளை மேலும் பலப்படுத்துவதற்கான தேவை என்ன இருக்கிறது. அன்று பொலன றுவையில் இருந்து பொத்துவில் வரை கிட்டத்தட்ட 225 தடைமுகாம்கள் யுத்த காலத்தில் இருந்தது. இதில் மன்னன்பிட்டி சோதனைச் சாவடி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட வரலாறுகளும் இல்லை. ஆனால் அம்முகாம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
வெள்ளாவெளி, கும்புறுபிட்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான், ஏறாவூர், புதூர், பளு காமம், கொக்கட்டிச்சோலை, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பல பிரதேசங்களில் இவர்களின் நில ஆக்கிரமிப்பு காணப்பட்டது. கல்லடி இராணுவ முகாம் இன்னமும் நிலைகொண்டுள்ளது. இராணுவத்தினர் தமது சொந்த பிரதேசத்திலும், நிலைகொண்டுள்ள பிரதேசங்களிலும் திருமணம் செய்துகொண்டு காணிகளை அபகரித்த சம்பவங்களும் இருக்கின்றது. இவ்விடயம் தற்போது ஆங்காங்கே நடைபெறுகிறது. இதனை ஒரு சூத்திரமாகக் கொண்டு கையாள்கின்றனர். இவ்வாறு படிப்படியாக நிலப்பரப்புக்கள் சுரண்டப்பட்டுள்ளது.
யுத்த காலத்தின் பின்னர் வட-கிழக்கில் 25இற்கும் மேற்பட்ட பௌத்த விகாரை கள் முளைத்திருக்கின்றன. முன்னரும் பௌத்த விகாரை கள் இருந்தது. ஆனால் பின்னர் அரச மரங்களை நாட்டும் இடமெல்லாம் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றது. இவற்றிற்கு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பினர் என்ன தீர்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்று தமிழ் மக்களை பிரதிநிதித் துவப்படுத்தும் அரசியல்வாதிகளில், வங்குரோத்து அரசியலைச் செய்பவர்களும், தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பவர்களும் உள்ளடக் கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தமிழ் மக்களது பிரச்சினைகளான நில ஆக்கிரமிப்பு, தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை போன்ற பல முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. இதில் மிக முக்கியமாக காட்டிக்கொடுப்பு, ஒற்றுமையின்மையை அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இன்று வட-கிழக்கில் ஒரு சம்பவம் தமிழ் மக்களுக்கெதிராக தலைதூக்குகின்றது எனில் அதற்கு தமிழ்த்தரப்பினர் ஒன்றுகூடி இதற்கான தீர்வுகள் குறித்து ஆராய்கின்றீர்களா? இல்லை. இதில் கட்சிகளின் தலைவர்கள் சிந்திப்பதில்லை. தனது கட்சி தொடர்பாகவே சிந்திக்கின்றனர். இதன் காரணமாக கட்சிகளுக்கிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களைச் செய்கின்றனர். தாம் நினைத்த மாத்திரத்தில் முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு தங்களது அரசியல் தொடர்பில் சிந்திக்கின்றனரே தவிர, தமிழ் மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்கின்றபோது ஊடகங்களில் புகைப்படங்கள் வரவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒருமுறையாவது தமிழ்த்தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து கூடிப்பேசுகின்றனரா என்று பார்த்தால் அது கிடையாது.
கிளிநொச்சியில் தமிழ்த்தரப்பினர் ஒன்றுகூடியிருந்தபோது, அதனைத் தெரிந்துகொண்டு ஒன்றுசேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உறவுகளுக்கான தீர்வு தொடர்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தினை செய்தபோது இவ்வார்ப்பாட்டக்காரர்களை சந்திப் பதற்கு சம்பந்தன் அவர்களுக்கு மாலையாகி விட்டது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தப்பித்து வாகனத்தில் சென்றுவிட்டார். அண்மையில் வவுனியாவிலும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி நடத்தப்பட்டது. இதனைக் கொச்சைப்படுத்தும் நோக்கிலும் சிலர் செயற்பட்டார்கள்.
இவ்விடயத்தில் தமிழ்த் தரப்பினர்கள் ஒற்றுமையாக அனைவரும் இணைந்து செயற் பட்டீர்களா? நீங்கள் மக்களின் பிரதிநிதிகள்தானே? தமிழ் மக்களது தேவைகள் பற்றி உங்களுக்குத் தெரி யாதா?
மக்கள் போராட ஆரம்பித்த பிறகுதான் உங்களுக்குத் தெரிகி றதா? தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் என ஆரம்பித்த பிறகுதான் உடனே அங்கு செல்கின்றீர்கள். இது நியா யமானதா? உண்மையில் உங்களின் கடமையினை உணர்ந்துதான் செயற்படுகின்றீர்களா? காணாமல் போனவர்களின் விபரங்களை இதுவரையிலும் முழுமையாகத் திரட்டியிருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் தரவுகளை மக்களிடமிருந்து கேட்கின்றீர்கள். இவ்வாறான விடயங்களை ஏன் நீங்கள் ஒற்றுமையாக இதுவரை செய்யவில்லை. இதனைத்தான் மக்கள் கேட்கின்றார்கள். அடிப்படைப் பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவற்றை செய்துகொடுங்கள். அதற்காகத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். சிந்தித்துச் செயற்படாமல் உங்களது சுயநல அரசியலுக்காகச் செயற்படக்கூடாது.
யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவ்விடயம் உண்மையில் உங்களுக்குத் தெரியாதா? உடனே ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகச் செல்கின்றீர்கள். ஊடகங்களுக்கு கூடியிருந்து புகைப்படங்கள் எடுத்து செய்தியாக வெளிவரச்செய்துவிடுகிறீர்கள். இதற்காகவா நீங்கள் அங்கே செல்லவேண்டும். உங்களுக்குரிய கடமை என்ன? தமிழ் மக்கள் என்ன நோக்கத்திற்காக உங்களுக்கு வாக்களித்தார்கள்.
மக்கள் உலகின் மாபெரும் சக்தியாகும். ஆனால் இன்று உங்களது சுயநலத்திற்காக மக்களது போராட்டங்களுக்குச் செல்கின்றீர்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக ஒற்றுமையாகச் செயற்படுங்கள். கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் தங்களது வாழ்க்கையினைத் தொலைத்து பல துன்பங்களை அனுபவித்தவர்களாக, தற்போது உங்களை நம்பி பயன் இல்லை என்று தாங்களாகவே தமது உரிமைகளைப் பெறுவதற்காக வீதிகளில் இறங்கிப் போராட முன்வந்திருக்கிறார்கள். இதற்குரிய தீர்வுகள் தொடர்பில் தான் நீங்கள் சிந்திக்கவேண்டும்.
தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற கோட்பாடுகளுடன் தமிழ் மக்களது அரசியல் பயணிக்கவேண்டும். இவற்றை நோக்காகக்கொண்டுதான் தமிழ்த்தரப்பினரும் செயற்படவேண்டும்.
இராணுவப் புலனாய்வினர் என்பவர்கள் மறைமுகமாக ஒரு நாட்டின் தகவலை அறிந்து அதற்கேற்றாற்போல செயற்படுவதுதான் அவர்களது வேலை. யாரைக்கேட்டாலும் இராணுவப் புலனாய்வு என்று கூறுகிறார்கள். இவர்களை நாங்கள் இனங்காணமுடியாத சூழ்நிலை தொடர்கிறது. காரணம் எங்களுக்குள்ளும் இருந்து செயற்படுகின்றார்கள். சில செயற்பாடுகளைச் செய்கின்றபோது மறைமுகமாக செயற்படுத்தவேண்டும். சில விடயங்களை நாமே முற்கூட்டியே அனைத்தையும் வெளிப்படுத்திவிடுகிறோம்.
தமிழ் மக்களாகிய நாம் ஒரு இலக்கினை நோக்கிப் பயணிக்கிறோம். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறுதிவரை தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர். உலக நாடுகளையே கதிகலங்கவைத்தவர். அவரைப்போல இன்னொருவர் என்பதை நினைத்துப்பார்க்கமுடியாது. தமிழ் மக்களது தேசியத்தலைவர் என்றால் அது பிரபாகரன் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. காட்டிக்கொடுப்புக்களை விடுத்து ஒற்றுமையே பலம் என்பதை நினைவில் கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் வடமாகாணசபை என்பன இணைந்து செயற்படவேண்டும். வடக்கின் முதல்வர் ஒரு பாதை யில் பயணம் செய்கின்றார். தமிழ்த்தரப்பினர் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயற்படாது போனால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இயலாது. தீர்வுகளைப்பெற முடியாமல் போனால் அதற்குரிய முழுக்காரணமும் உங்களையே சாரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இரணியன்