சனல்- 4 நிகழ்ச்சிப் பணிப்பாளர் மனைவியுடன் கொழும்பில்?

439

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று திங்கட்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறித்த பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும், விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013ம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE